Your cart is empty.
கச்சேரி
தமிழ் சிறுகதை எழுத்தாளர்களில் பெரும் கலைஞர் தி. ஜானகிராமன். நவீன புனைகதைக்கு அவர் அளித்திருப்பவை வெவ்வேறு நிறமும் வெவ்வேறு களமும் வெவ்வேறு உணர்வும் கொண்ட ஒளி பொருந்திய … மேலும்
மொழிபெயர்ப்பாளர்: சுகுமாரன் |
வகைமைகள்: விற்பனையில் சிறந்தவை | சிறுகதைகள் |
தமிழ் சிறுகதை எழுத்தாளர்களில் பெரும் கலைஞர் தி. ஜானகிராமன். நவீன புனைகதைக்கு அவர் அளித்திருப்பவை வெவ்வேறு நிறமும் வெவ்வேறு களமும் வெவ்வேறு உணர்வும் கொண்ட ஒளி பொருந்திய கதைகள். அவரது கதையுலகம் நுட்பமானது மட்டுமல்ல; விரிவானதும் கூட. ‘கச்சேரி’ தொகுப்பு அந்த விரிவை மேலும் விரிவாக்குகிறது. தி. ஜானகிராமன் எழுதி இதழ்களில் வெளிவந்தவையும் தொகுப்புகளில் இடம்பெறாதவையுமான 28 கதைகள் அரிதின் முயன்று கண்டுபிடிக்கப்பட்டு இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. ஜானகிராமனின் விடுபட்ட உலகில் நாம் காணமறந்த காட்சிகளை வாசிப்புக்கு விருந்தாக்குகிறது ‘கச்சேரி’.
தி. ஜானகிராமன்
தி. ஜானகிராமன் (1921-1982) தி. ஜானகிராமன் தஞ்சை மாவட்டம் மன்னார்குடியை அடுத்த தேவங்குடியில் பிறந்தவர். பத்து வருடங்கள் பள்ளியாசிரியராகப் பணியாற்றியவர். பின்பு அகில இந்திய வானொலியில் பணியாற்றி ஓய்வுபெற்றார். கர்நாடக இசை அறிவும் வடமொழிப் புலமையும் பெற்றிருந்தவர். 1943இல் எழுதத் தொடங்கிய தி. ஜானகிராமன், ‘மோக முள்’, ‘அம்மா வந்தாள்’, ‘மரப்பசு’ உள்ளிட்ட ஒன்பது நாவல்கள், நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், மூன்று நாடகங்கள், பயண நூல்கள் ஆகியவற்றை எழுதினார். சிட்டியுடன் இணைந்து எழுதிய ‘நடந்தாய் வாழி காவேரி’ பயண இலக்கிய வகையில் முக்கியமான நூலாகக் கருதப்படுகிறது. ‘மோக முள்’, ‘நாலு வேலி நிலம்’ ஆகியன திரைப்படமாக்கப்பட்டுள்ளன. ‘மோக முள்’, ‘மரப்பசு’, ‘அம்மா வந்தாள்’ ஆகிய நாவல்களும் பல சிறுகதைகளும் இந்திய, ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. 1979இல் ‘சக்தி வைத்தியம்’ சிறுகதைத் தொகுப்பிற்கு சாகித்திய அக்காதெமி விருது வழங்கப்பட்டது.
ISBN : 9789389820034
SIZE : 13.7 X 1.9 X 21.4 cm
WEIGHT : 295.0 grams