இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க் கவிதையில் முன்னெப்பொழுதும் காணாத அபூர்வம். பின்னெப்பொழுதும் தொடரவியலாத திருப்பம். பிரமிள் என்ற கவியாளுமையை இப்படிச் சுட்டுவது உயர்வு நவிற்சியன்று. புதுக்கவிதை பெருக்கெடுக்கத் தொடங்கிய …
மேலும்
இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க் கவிதையில் முன்னெப்பொழுதும் காணாத அபூர்வம். பின்னெப்பொழுதும் தொடரவியலாத திருப்பம். பிரமிள் என்ற கவியாளுமையை இப்படிச் சுட்டுவது உயர்வு நவிற்சியன்று. புதுக்கவிதை பெருக்கெடுக்கத் தொடங்கிய 1960-70களில் 'எழுத்து' இதழில் ஊற்றெடுத்துப் பாய்ச்சலை நிகழ்த்தினார் பிரமிள். அவரது கவிப்பெருக்கு தமிழுக்குப் புதிய வளங்களைச் சேர்த்தது. புதிய சொல், புதிய கூற்று, புதிய சந்தம், புதிய பொருள் எனப் பிரமிள் முன்னெடுத்த தனித்த கவிமொழி நவீன கவிதையையே உருமாற்றியது. இதுவே அவரை இம்மொழி யின் மகத்தான கவிஞர்களில் ஒருவராக நிலைநிறுத்தியிருக்கிறது. முன்னோடியாகவும் நிறுவுகிறது. அரை நூற்றாண்டுக்கும் முன்பு வெளியான பிரமிளின் முதல் தொகுப்பான 'கண்ணாடியுள்ளிருந்து' அன்று கவிதைக்கு வேறு திசையைக் காட்டியது. இன்னும் காலத்தைப் பின்னுக்குத் தள்ளி புதுமை குன்றாமல் முன்னிற்கிறது.