Your cart is empty.
குதிரை வேட்டை
பெர் பெதர்சன் கதை சொல்லும் பாணி வித்தியாசமானது. உணர்ச்சி மிகாத மொழியில், நடந்தவை அனைத்தையும் மறு பரிசீலனை செய்கிற தொனியில், அன்று நடந்தவற்றின் மீது இன்றுவரை நீங்காதிருக்கும் … மேலும்
மொழிபெயர்ப்பாளர்: யுவன் சந்திரசேகர் |
வகைமைகள்: உலக கிளாசிக் நாவல் | நவீன உலக கிளாசிக் நாவல் |
பெர் பெதர்சன் கதை சொல்லும் பாணி வித்தியாசமானது. உணர்ச்சி மிகாத மொழியில், நடந்தவை அனைத்தையும் மறு பரிசீலனை செய்கிற தொனியில், அன்று நடந்தவற்றின் மீது இன்றுவரை நீங்காதிருக்கும் ஆச்சரியம் மிகுந்த குரலில் சொல்லிக்கொண்டே போகிறார். ஊழின் மாயக் கரங்கள் செயல்படுவதை; தற்செயலின் சாயல் கொண்ட, ஆனால் துல்லியமாகத் திட்டமிடப்பட்டவை போன்ற கச்சிதம் கொண்ட நிகழ்வுகளின் முன் மனிதவாழ்க்கையும் அதன் எச்சரிக்கையுணர்வும் திகைத்து நிற்பதைச் சொல்வதே ‘குதிரை வேட்டை’ நாவலின் மைய ஓட்டம்.
பெர் பெதர்சன்
பெர் பெதர்சன் நார்வீஜிய எழுத்தாளரான பெர் பெதர்சன் 1952 ஜூலை 18 அன்று பிறந்தார். ஐந்து நாவல்களும் ஒரு சிறுகதைத் தொகுப்பும் வெளியாகியிருக்கின்றன. ஐம்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் இவரது படைப்புகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. மதிப்புக்குரிய இலக்கியப் பரிசுகள் பலவற்றை வென்றுள்ளார். 1990இல், நார்வேயிலிருந்து டென்மார்க் சென்ற போக்குவரத்துப் படகில் நேர்ந்த தீ விபத்துக்குத் தமது பெற்றோர், இளைய சகோதரர் மற்றும் ஒர் உறவினரைப் பறிகொடுத்தார். இவரது முதல் நாவலைப் படித்துவிட்டு, ‘உனது அடுத்த நூல் இவ்வளவு சிறுபிள்ளைத்தனமாக இருக்காது என்று நம்புகிறேன்’ என்று கருத்துரைத்த அம்மா, அடுத்த வாரமே விபத்தில் இறந்துபோனார். நார்வீஜிய எழுத்தாளர் நட்ஹாம்ஸனையும் அமெரிக்கரான ரேமண்ட் கார்வரையும் தமது ஆதர்சங்களாகக் கொண்ட பெர் தெர்சன் நூலகராகப் பயிற்சி பெற்றவர். முழுநேர எழுத்தாளராவதற்கு முன் புத்தகக்கடை எழுத்தாளராகப் பணிபுரிந்தார். தற்போது ஆஸ்லோவில் வசிக்கிறார். தமிழில் வெளியாகும் ‘குதிரை வேட்டை’, அவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தையும் விருதுகளையும் பெற்றுத் தந்த நாவல். நியூயார்க் டைம்ஸ் புத்தக விமர்சன இதழ் வெளியிட்ட 2007ஆம் ஆண்டின் தலைசிறந்த பத்து நூல்களில் ஒன்றாக இடம்பெற்றது.
ISBN : 9789382033158
SIZE : 14.9 X 1.0 X 22.9 cm
WEIGHT : 328.0 grams
Out Stealing Horses has been embraced across the world as a classic, a novel of universal relevance and power. Panoramic and gripping, it tells the story of Tron Sander, a sixty-seven-year-old man who has moved from the city to a remote, riverside cabin, only to have all the turbulence, grief, and overwhelming beauty of his youth come back to him one night while he’s out on a walk.<\p>
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
வாழ்வின் தாள முடியா மென்மை
-செக்கோஸ்லோவேகிய பிரெஞ்சு நாவலாசிரியர் மிலன் குந்தேராவின் உலகப் புகழ்பெற்ற கிளாசிக் நாவலான வாழ்வி மேலும்














