Your cart is empty.


மாபெரும் சூதாட்டம்
நவீன தமிழ்ச் சிறுகதைப் பரப்பின் எல்லைகளை விரிவுபடுத்திய சில படைப்பாளிகளில் ஒருவர், சுரேஷ்குமார இந்திரஜித். முன்னோடிகளின் பாதிப்பு இல்லாமல் சுயமான தடத்தில் செல்கிறவர். இவருடைய கதைகளில் நிகழ்வுகளுக்கும் … மேலும்
நவீன தமிழ்ச் சிறுகதைப் பரப்பின் எல்லைகளை விரிவுபடுத்திய சில படைப்பாளிகளில் ஒருவர், சுரேஷ்குமார இந்திரஜித். முன்னோடிகளின் பாதிப்பு இல்லாமல் சுயமான தடத்தில் செல்கிறவர். இவருடைய கதைகளில் நிகழ்வுகளுக்கும் உள் மனவோட்டத்துக்குமிடையேயான தருணங்கள் சிருஷ்டிகரமான புனைவுகளாக உருவாகின்றன; வாழ்க்கையின், உறவுகளின் மர்மங்கள் மாயப் புனைவுகளாக வெளிப்படுகின்றன. 2005 வரை சுரேஷ்குமார இந்திரஜித் எழுதிய கதைகளின் தொகுப்பு இது.
சுரேஷ்குமார இந்திரஜித்
சுரேஷ்குமார இந்திரஜித் (பி. 1953) ராமேஸ்வரத்தில் பிறந்து, மதுரையில் வளர்ந்து படித்தவர். மதுரை வருவாய்த்துறையில் சிரஸ்தாராகப் பணியாற்றி 2011இல் ஓய்வு பெற்றவர். மனைவி: மல்லிகா, மகள்கள்: அபிநயா, ஸ்ரீஜனனி. தொடர்புக்கு: sureshkumaraindrajith@gmail.com
ISBN : 9788189359164
SIZE : 13.9 X 1.2 X 21.2 cm
WEIGHT : 260.0 grams