Your cart is empty.
மாறாது என்று எதுவுமில்லை
மேலும்
பெஜவாடா வில்சனிடம் கண்ட விரிவான நேர்காணல் நூல் இது. இதன் முதல் பகுதி ‘காலச்சுவடு’ இதழில் (டிசம்பர் 2017) வெளியாகி மிகுந்த கவனம் பெற்றது. கையால் மலம் அள்ளும் வேலையை ஒழிப்பதற்காகவும் துப்புரவுப் பணியாளர்களுக்காகவும் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாகச் செயல்பட்டுவருபவர் வில்சன். கையால் மலம் அள்ளும் முறை ஒழிப்பு, துப்புரவுப் பணி ஆகியவை குறித்த பல்வேறு பார்வைகளையும் சட்டப் போராட்டங்களையும் அவர் பேசியுள்ளார். தனது அரசியல், சமூகப் பார்வைகளைப் பேசியுள்ளார். தன் தனிப்பட்ட வாழ்வு குறித்துப் பேசியிருக்கிறார்.
அவர் பேசியவை நமக்கு அறிவூட்டுகின்றன; புதுவெளிச்சத்தைக் கொடுக்கின்றன; மனசாட்சியை உலுக்குகின்றன. கழிவகற்றும் தொழிலுக்குப் பின்னால் செயல்படும் சாதிய மனோபாவத்தை வெளிப்படையாகவும் நுட்பமாகவும் எடுத்துக் காட்டுகிறார். பல்வேறு கேள்விகளை எழுப்புகிறார். எல்லோரது பொறுப்புணர்வையும் சுட்டிக் காட்டுகிறார். ‘மாறாது என்று எதுவுமில்லை’ என்கிறார் வில்சன். இதை வாசிக்கும் ஒவ்வொருவர் மனதிலும் குறைந்தபட்ச மாற்றமாவது உருவாகும் என்பது என் நம்பிக்கை. இதை நூலாக்கம் செய்வதற்கு இந்த நம்பிக்கையே காரணம்.
ISBN : 9789355233011
SIZE : 139.0 X 6.0 X 214.0 cm
WEIGHT : 98.0 grams