Your cart is empty.
மகிழம்பூ மணம்
மனித முரண்பாடுகளை உள்வாங்கிக்கொள்வதில் ஜயந்த் காய்கிணியின் பார்வை மாறுபட்டது. சிறிய ஊரிலிருந்து வந்தவரானாலும், ஜயந்த் நகர வாழ்க்கையைப் பார்க்கும் பார்வை கன்னடத்திற்குப் புதியது. கதைகளில் அவருடைய ஈடுபாடு, … மேலும்
மனித முரண்பாடுகளை உள்வாங்கிக்கொள்வதில் ஜயந்த் காய்கிணியின் பார்வை மாறுபட்டது. சிறிய ஊரிலிருந்து வந்தவரானாலும், ஜயந்த் நகர வாழ்க்கையைப் பார்க்கும் பார்வை கன்னடத்திற்குப் புதியது. கதைகளில் அவருடைய ஈடுபாடு, ஓட்டத்தின் லயம், எழும் துடிப்பு, எல்லாம் அவருக்கே உரித்தானவை. படிக்கவேண்டும் என்று தூண்டும் அதிசய ஈர்ப்புள்ள எழுத்தாளர் ஜயந்த். - கிரீஷ் கார்னாட் புதிய களங்கள், புதிய மாந்தர்கள் என எல்லா வகைகளிலும் புதியவற்றை நாடிச் செல்லும் விழைவுடையவர் ஜயந்த் காய்கிணி. கூடுவிட்டுக் கூடு பாய்வது போல ஒவ்வொரு கதையிலும் இவருடைய களங்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன. எவ்விதமான முன்திட்டமும் இல்லாமல் எழும் இவருடைய கதைகள் மிகவும் இயல்பாகப் புதிய சூழல்களுடன் பொருந்திவிடுகின்றன. சாதாரணமாக ஒன்றையடுத்து ஒன்றாக நிகழ்ச்சிகளை அடுக்கிக்கொண்டு போகிற போக்கில் எங்கோ ஒரு கணத்தில் வாழ்க்கையை மதிப்பிடும் ஒரு சொல் அல்லது ஒரு வரி அல்லது ஒரு காட்சி மிகவும் இயல்பான வகையில் அமைந்திருப்பதை வாசகர்கள் உணரமுடியும். அத்தகு கணங்கள் கதையின் வாசிப்பனுபவத்தைப் பல மடங்காகப் பெருக்கி மனத்தை நிறைக்கின்றன. - பாவண்ணன்
ஜயந்த் காய்கிணி
ஜயந்த் காய்கிணி (பி. 1955) ஜயந்த் காய்கிணி: பிறந்தது கடற்கரை புனித கோவில் நகரமான கோகர்ணாவில். உயர் வேதியியல் துறையில் பட்டம் பெற்று, மும்பையில் மருந்தாக்கத் தொழில் நிறுவனம் ஒன்றில் இருபதாண்டுகளாகப் பணிபுரிந்து, தற்போது பெங்களூருவில் வசிக்கிறார். கவிஞர், சிறுகதை எழுத்தாளர், கட்டுரையாளர், நாடக எழுத்தாளர், கன்னட சினிமா பாடலாசிரியர், வசனகர்த்தா. ஆறு சிறுகதைத் தொகுப்புகளும் ஐந்து கவிதைத் தொகுப்புகளும் மூன்று நாடகத் தொகுப்புகளும் வெளிவந்திருக்கின்றன. பெருமைக்குரிய பல விருதுகளைப் பெற்றவர். கர்நாடக சாகித்ய அகாடெமியின் நான்கு விருதுகள், குசுமாக்ராஜ் ராஷ்ட்ரீய பாஷா புரஸ்கார், கதா தேசிய விருது, நான்கு ஃபில்ம் ஃபேர் விருதுகள், சினிமா பாடல் - வசனத்திற்காக இரண்டு கர்நாடக மாநில விருதுகள் பெற்றவர். தும்கூர் பல்கலைக் கழகம் இவருக்குக் கௌரவ முனைவர் பட்டம் அளித்துப் பெருமைப்படுத்தியிருக்கிறது. இவரது ‘நோ ப்ரெசெண்ட் ப்ளீஸ்’ சிறுகதைத் தொகுப்பு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு ‘தென்னாசிய இலக்கிய 2018’ இன் டி.எஸ்.சி. விருதைப் பெற்றிருக்கிறது. பெங்களூர் ‘அட்ட கலாட்டா இலக்கிய விழா 2018’ புனைகதைகளுக்கான விருதையும் பெற்றிருக்கிறார்.
ISBN : 9789389820140
SIZE : 13.7 X 0.7 X 21.4 cm
WEIGHT : 164.0 grams