Your cart is empty.
மணல்
இந்த மனிதர்கள் நமக்கு நன்கு அறிமுகமானவர்கள். வேலை, படிப்பு, காதல், பாசம், திருமணம் எனப் பல அபிலாஷைகளும் ஊடாட்டங்களும் கொண்டவர்கள். நவீன வாழ்க்கைக் கும் பாரம்பரியத்துக்கும் இடையில் … மேலும்
இந்த மனிதர்கள் நமக்கு நன்கு அறிமுகமானவர்கள். வேலை, படிப்பு, காதல், பாசம், திருமணம் எனப் பல அபிலாஷைகளும் ஊடாட்டங்களும் கொண்டவர்கள். நவீன வாழ்க்கைக் கும் பாரம்பரியத்துக்கும் இடையில் தடுமாறுபவர்கள். வசதிக்கும் வசதி யின்மைக்கும் இடையில் சிக்கிக் கொண்டவர்கள். உறவுசார்ந்த நெகிழ்ச்சி இருந்தாலும் அதை வெளிப்படுத்தும் திறன் அற்றவர்கள். சென்னையில் எழுபதுகளில் இருந்திருக்கக்கூடிய ஒரு குடும்பத்தின் சித்திரத்தை அசோகமித்திரன் தரும் விதத்தில் அந்தக் குடும்பம் நமது அக்கறைக்குரிய குடும்பமாக மாறிவிடுகிறது. இறுக்கமும் அவஸ்தையும் பதற்றமும் நிரம்பிய இந்தக் குடும்பத்தினரின் அன்றாட வாழ்வின் சித்திரங்களை அசோகமித்திரன் தருகிறார். இவர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள் என்று நீங்கள் கேட்கலாம். மணல் உங்களுக்குப் பதில் சொல்லாது. மணலைத் தோண்டிப் பார்த்து அறிந்துகொள்ளலாம். அரவிந்தன்
அசோகமித்திரன்
அசோகமித்திரன் (1931-2017) இயற்பெயர் ஜ. தியாகராஜன். செகந்தராபாத்தில் பிறந்தார். மெஹ்பூப் கல்லூரியிலும் நிஜாம் கல்லூரியிலும் ஆங்கிலம், இயற்பியல், வேதியியல் படித்தார். தந்தையின் மறைவுக்குப்பின் இருபத்தொன்றாம் வயதில் குடும்பத்துடன் சென்னைக்குக் குடியேறினார். கணையாழி மாத இதழின் ஆசிரியராக பல ஆண்டுகள் பணியாற்றினார். 1951 முதல் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதினார். சிறுகதை, குறுநாவல், நாவல், கட்டுரை, விமர்சனம், சுய அனுபவப் பதிவு போன்ற பிரிவுகளில் 60 நூல்களுக்கு மேல் எழுதியிருக்கிறார். பல இந்திய மொழிகளிலும் சில ஐரோப்பிய மொழிகளிலும் இவரது நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 1973இல் அமெரிக்காவின் அயோவா பல்கலைக்கழகத்தின் எழுத்தாளர்களுக்கான சிறப்புப் பயிலரங்கில் கலந்துகொண்டவர். 1996ஆம் ஆண்டு சாகித்திய அக்காதெமி விருது பெற்றார். அசோகமித்திரன் தனது 85வது வயதில், 23.03.2017 அன்று சென்னை வேளச்சேரியில் காலமானார். மனைவி: ராஜேஸ்வரி. மகன்கள்: தி. ரவிசங்கர், தி. முத்துக்குமார், தி. ராமகிருஷ்ணன்.
ISBN : 9789386820075
SIZE : 12.2 X 0.5 X 18.0 cm
WEIGHT : 89.0 grams
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
கவி வந்த்யகட்டி காயியின் வாழ்வும் சாவும்
சைதன்யரின் வருகையோடு சமூகச் சலனங்கள் உருவான பதினைந்தாம் நூற்றாண்டின் வங்காளத்தில் பழங்குடிச்சமூக மேலும்
காகித மலர்கள்
சூழலியல் சார்ந்த அக்கறைகள், தில்லி அரசியலின் குறுக்குவெட்டுப் பார்வை, பெருநகரத்து மனிதர்களின் உள் மேலும்