Your cart is empty.
மீஸான் கற்கள்
புராதனமான பள்ளி வாசலையும் பள்ளி வளாகத்தையும் பற்றிய கதை. வளாகம் நிறைந்து கிடக்கும் கல்லறைகளையும் கதைகளைக் கற்பிதம் செய்ய இயலும் கல்லறைவாசிகளையும் பற்றிய கதை. உயிர்த்தெழுந்து மறுபடியும் … மேலும்
மொழிபெயர்ப்பாளர்: குளச்சல் மு. யூசுப் |
வகைமைகள்: விற்பனையில் சிறந்தவை | விருதுபெற்ற எழுத்தாளர் | இந்திய கிளாசிக் நாவல் | நவீன இந்திய கிளாசிக் நாவல் |
புராதனமான பள்ளி வாசலையும் பள்ளி வளாகத்தையும் பற்றிய கதை. வளாகம் நிறைந்து கிடக்கும் கல்லறைகளையும் கதைகளைக் கற்பிதம் செய்ய இயலும் கல்லறைவாசிகளையும் பற்றிய கதை. உயிர்த்தெழுந்து மறுபடியும் வாழ்ந்து கொண்டிருக்கும் கல்லறைவாசிகள். மீஸான் கற்களின் ஜீவன் மனிதர்கள்தான். மீஸான் கற்களாக மாறிய அழியாத மனிதர்கள். மறைக்கப்பட்டவைகளையும் அற்புத ஒளி பகரும் கதாபாத்திரங்களையும் ஆகர்ஷித்து இணைத்து அனுபவிக்கச் செய்வதுடன் மலையாள நாவல் வரலாற்றில் தன் பங்கை உறுதியுடன் செலுத்தி மொழிக்குப் புதிய அழகினை உருவாக்கிய நாவல். மத்திய, மாநில சாகித்ய அக்காதெமி விருதுகளைப் பெற்ற நாவல்.
புனத்தில் குஞ்ஞப்துல்லா
புனத்தில் குஞ்ஞப்துல்லா (1940) தலைச்சேரி பிரணன் கல்லூரியிலும் அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்திலும் கல்வி பயின்றவர். எம்.பி.பி.எஸ். படித்து, சிறிதுகாலம் சவுதி அரேபியாவில் தமாம் என்னுமிடத்தில் பணிபுரிந்தார். இப்போது கேரளா, வடகரையில் (அல்மா ஹாஸ்பிட்டல்) மருத்துவப் பணியாற்றி வருகிறார். மனைவியும், மூன்று பிள்ளைகளும் கொண்ட குடும்பம். அலிகார் கைதி, சூரியன், கத்தி, ஸ்மாரக சிலகள், கலீபா, மருந்து, மலைமுகட்டில் அப்துல்லா, நவக்கிரகங்களின் சிறைச்சாலை (சேதுவுடன் இணைந்து), குஞ்ஞப்துல்லாவின் குரூரங்கள், வருத்தப்படுவர்களுக்கு ஒரு நிழல் தாங்கல், சதி, மினிக்கதைகள், தவறுகள், நரபலி, கிருஷ்ணனின் ராதை, ஆகாயத்தின் மறுபுறம், என் பெற்றோர்களின் நினைவாக, காலாட்படையின் வருகை, அஞ்ஞானி, காமப்பூக்கள், பாவியின் காசாயம், டாக்டர் உள்ளேதான் இருக்கிறார், தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள், கன்யா வனங்கள், நடைபாதைகள், சட்டையில்லாத கதாபாத்திரங்கள், மேகக்குடைகள் போன்றவை இவரது முக்கிய படைப்புகள். விருதுகள் : மலைமுகட்டில் அப்துல்லா கேரளா சாகித்ய அகாதமி, ஸ்மாரக சிலகள் (மீஸான் கற்கள்) மத்திய, மாநில சாகித்ய அகாதமி விருது, மருந்து விஸ்வதீபம் விருது. முகவரி : Punathil Kunhabdullah Municipal Park Road, Badagara Calicut 673 101, Kerala
ISBN : 9788187477921
SIZE : 13.8 X 1.5 X 21.2 cm
WEIGHT : 354.0 grams
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
மறியா தாமுவுக்கு எழுதிய கடிதம்
-கடந்த சில ஆண்டுகளில் சு.ரா. எழுதிய 12 கதைகளின் தொகுப்பு இந்நூல்.
சு.ரா.வின் புனைவுலகம் அ மேலும்