Your cart is empty.
முறிந்த ஏப்ரல்
-எழுபது ஆண்டுகளுக்குமுன் வீட்டுக் கதவைத் தட்டிய, ஊர்பேர் தெரியாத விருந்தாளி சிந்திய … மேலும்
-எழுபது ஆண்டுகளுக்குமுன் வீட்டுக் கதவைத் தட்டிய, ஊர்பேர் தெரியாத விருந்தாளி சிந்திய இரத்தத்திற்காக மூன்று தலைமுறைகளாக நீளும் சங்கிலித் தொடரான பழிவாங்கல் நாடகத்தைப் புராதன கானூன் சாத்திர விதி ஜார்க்கின் குடும்பத்தில் துவக்கிவைக்கிறது. தன் முறைக்கான பழிவாங்கலை முடித்துவிட்டுத் தான் சுடப்படும் ஏப்ரல் கெடுவிற்காகக் காத்துக்கொண்டிருக்கும் ஜார்க், சாவின் ராச்சியத்திற்குள் பிரவேசிக்கும் எழுத்தாளர் பெஸ்ஸியனின் மனைவி டயானாவைச் சந்திக்கிறான். சாவதற்குள் அவளை மறுபடிச் சந்தித்துவிடும் ஒரே ஒரு வாய்ப்பிற்காகத் தனக்கான காலக் கெடுவை மீறுகிறான். மறுபுறம் டயானாவும் தனக்கு விதிக்கப்பட்ட இடம் சார்ந்த வரையறையை மீறுகிறாள், ஜார்க்கைச் சந்தித்துவிடும் ஒரே ஒரு வாய்ப்பிற்காக. வடக்கு அல்பேனியாவைக் களமாகக் கொண்ட இந்த நாவல், அங்கு நூற்றாண்டுகளாக நிலவும் இரத்தப் பழி மரபைப் பின்னணியாகக் கொண்டது. இஸ்மாயில் கதாரேயின் இந்த நாவல் 2001இல் ‘Behind the Sun" என்னும் பெயரில் திரைப்படமாக்கப்பட்டுச் சில விருதுகளையும் பெற்றிருக்கிறது.
ISBN : 978-93-5523-120-8
SIZE : 14.2 X 1.4 X 21.5 cm
WEIGHT : 350.0 grams
சரவணன் மாணிக்கவாசகம்
5 Jul 2024
அல்பேனியர்களுக்குவிருந்தாளி என்பவன்அரைக்கடவுள். தகப்பன், மகனைக்கொன்றவர்களைக்கூடவிட்டுவிடுவார்கள், ஆனால்தங்கள்வீட்டுக்குஅடைக்கலம்தேடிவந்தவிருந்தாளியைக்கொன்றவனைப்பழிவாங்காமல்விடமாட்டார்கள். இப்படித்தான்எழுபதுவருடங்களுக்குமுன்வீட்டுக்குவந்தவிருந்தாளியைக்கொன்றவனைப்பழிவாங்க, அவர்கள்குடும்பத்திலிருந்துஒருவன்இவனைப்பழிவாங்கஎன்றுஇத்தனைவருடங்களில்நாற்பத்தியிரண்டுகல்லறைகள்ஆனது. இருபத்தாறுவயதுஇளைஞன்அண்ணனைக்கொன்றவனைஇவன்பழிவாங்கியேஆகவேண்டும்என்றுதந்தைவற்புறுத்தியதால், அவனைக்கொல்வதில்இருந்துநாவல்ஆரம்பிக்கிறது.
இரண்டு கதைகள் ஒன்றுடன் ஒன்று கலந்தும், கலக்காமலும் பயணமாகின்றன. விருப்பத்திற்கு மாறாகக் கொலை செய்தவனுக்கு வழங்கப்பட்ட ஆயுட்காலம் முப்பது நாட்கள். அதன் பின்னர் அவன் எப்போது வேண்டுமானாலும் கொல்லப்படலாம். மற்றொரு கதையில் எழுத்தாளனும் அவன் இளம் மனைவியும் கனவுப் பயணம் போன்ற அல்பேனிய மேட்டுநிலத்திற்குத் தேனிலவுக்கு செல்கிறார்கள். காதலர் உடலளவில், மனதளவில் நெருங்கத்தானே தேனிலவு? பார்க்கலாம் என்ன நிகழ்கிறதென்று.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தைத் தன் காலகட்டமாகக் கொண்ட இந்த நாவலில் மேட்டுநிலத்தின் நிலப்பரப்பு, அந்த மக்களின் கலாச்சாரம், கிராமத்து நீதிகளும் சட்டங்களும், முட்டாள்தனமான பழிவாங்கும் பாரம்பரியம் அதற்காக உயிர்களையும் ஆயுள் சேமிப்பையும் இழப்பது, அதை அரசாங்கம் தனக்கு வருவாய் ஈட்டும் வழியாகப் பயன்படுத்திக்கொள்வது என்று முற்றிலும் நாமறியாத உலகத்திற்குள் இந்த நாவல் நம்மைக் கைப்பிடித்து அழைத்துச் செல்கிறது.
Symbols and Subtlety இந்த நாவலில் மிக அதிகம். உதாரணத்திற்கு நாவலின் ஆரம்பத்தில் மாதுளையும், பனியும் பலமுறை சொல்லப்படுகின்றன. மாதுளை-இரத்தம், பனி-சமாதானம். இரண்டில் அவன் எதைத் தேர்ந்தெடுக்கப்போகிறான்? இதுபோல் நாவலில் பல இடங்கள். கவனம் சிதறாமல் வாசிக்க வேண்டும். அதேபோல் டயானாவின் மனமாற்றம். எதிரில் பார்த்தும் பார்க்காமல் போகிற பெண், அடுத்த நாள் இறக்கப்போகிறான் என்பது தெரிந்தால் அணைத்து முத்தம் கொடுக்கத் தயங்காமல் இருக்கப்போவது எத்தனை பேருக்குத் தெரியும். பெண்கள் மனத்தை அவர்களே புரிந்துகொள்ள முடியாது. கதையின் முடிவு அப்படியே ஆரம்பத்தின் mirroring.
கதாரேயை ஆரம்பிப்பது என்பது மைசூர்பாகின் துளி விள்ளலைச் சுவைத்துவிட்டு நிறுத்திக்கொள்வோம் என்பதுபோன்ற மனநிலை. தீரும்வரை கையும் வாயும் சும்மா இருக்கப்போவதில்லை. பா.வெங்கடேசனை ஏற்கனவே ரசித்தவர்களுக்கு இந்த நாவலில் அவரையும் கதாரேயையும் ஒருங்கே ரசிக்கும் வாய்பை அளிக்கும் மொழிநடை. புதிதாக வாசிப்பவர்கள் பொறுமையாக வாசியுங்கள். பொறுமையில்லாதோருக்குக் காதலிகள் கிடைத்ததாக வரலாறேயில்லை.
(நன்றி: முகநூல் பதிவு)