Your cart is empty.
நான் தைலாம்பாள்
சுந்தர ராமசாமி பற்றிய நினைவுகளின் திரட்டான ‘நெஞ்சில் ஒளிரும் சுடர்’ நூலுக்குப் பிறகு கமலா ராமசாமி எழுதி வெளிவரும் நூல் ‘நான் தைலாம்பாள்’. தனது தாயின் வாழ்க்கை … மேலும்
சுந்தர ராமசாமி பற்றிய நினைவுகளின் திரட்டான ‘நெஞ்சில் ஒளிரும் சுடர்’ நூலுக்குப் பிறகு கமலா ராமசாமி எழுதி வெளிவரும் நூல் ‘நான் தைலாம்பாள்’. தனது தாயின் வாழ்க்கை குறித்து கமலா ராமசாமி எழுதியுள்ள நூல் ஒருவகையில் புதுமையானது. அம்மா தைலாம்பாளின் கதையை மகள் கமலா விரித்துரைக்கிறார். அதுவும் அம்மாவின் குரலில். அம்மாவின் பார்வையில். அம்மாவின் விருப்பு வெறுப்புகளினூடே. சென்ற நூற்றாண்டின் ஆரம்பம் முதல் முக்கால் பகுதிவரை வாழ்ந்த தைலாம்பாளின் விவரிப்பில் படர்ந்து தெரிவது அவரது சொந்த வாழ்க்கை மட்டுமல்ல: அந்தக் காலத்தின் இயல்பு; அந்த மனிதர்களின் மனம். சுகுமாரன் This is the second book of Kamala Ramasamy after her previous collection of memories on the life shared with Sundara Ramasamy. In this, Story of mother thailaambaal is narrated by daughter Kamala. In the Mother’s voice and perspective, likes and dislikes. Through Thailaambal who lived from the beginning of a century till the third quarter, she portrays not just her personal life, but the times and the thoughts and deeds of the people then.
கமலா ராமசாமி
கமலா ராமசாமி (பி. 1938) திருநெல்வேலி மாவட்டம் கடம்போடுவாழ்வில் பிறந்தவர். தந்தை லெக்ஷ்மணய்யர். தாயார் தைலாம்பாள். ஐந்தாம் வகுப்புவரை சொந்த ஊரில் படித்தார். பின்னர் ஒன்பதாம் வகுப்புவரை மதுரை கான்வென்ட்டில் படித்தார். அந்தக் கோடை விடுமுறையில் திருமணம். திருமணத்துக்குப் பின் நாகர்கோவிலில் கணவர் வீட்டில் படிப்பு தொடர்ந்தது. உடல் நலக்குறைவு காரணமாகத் தேர்வு எழுத இயலவில்லை. கணவர்: சுந்தர ராமசாமி; மகள்கள்: சௌந்தரா, தைலா, தங்கு; மகன்: சுந்தரம் (கண்ணன்)
ISBN : 978935244917
SIZE : 13.8 X 0.4 X 21.1 cm
WEIGHT : 96.0 grams