Your cart is empty.
கமலா ராமசாமி
பிறப்பு: 1938
கமலா ராமசாமி (பி. 1938) திருநெல்வேலி மாவட்டம் கடம்போடுவாழ்வில் பிறந்தவர். தந்தை லெக்ஷ்மணய்யர். தாயார் தைலாம்பாள். ஐந்தாம் வகுப்புவரை சொந்த ஊரில் படித்தார். பின்னர் ஒன்பதாம் வகுப்புவரை மதுரை கான்வென்ட்டில் படித்தார். அந்தக் கோடை விடுமுறையில் திருமணம். திருமணத்துக்குப் பின் நாகர்கோவிலில் கணவர் வீட்டில் படிப்பு தொடர்ந்தது. உடல் நலக்குறைவு காரணமாகத் தேர்வு எழுத இயலவில்லை. கணவர்: சுந்தர ராமசாமி; மகள்கள்: சௌந்தரா, தைலா, தங்கு; மகன்: சுந்தரம் (கண்ணன்)



