Your cart is empty.
நெஞ்சில் ஒளிரும் சுடர்
சுந்தர ராமசாமியுடன் வாழ்ந்த ஐம்பதாண்டுக் காலத்தின் அனுபவங்களை இந்த நூலில் முன்வைக்கிறார் கமலா ராமசாமி. ஓர் இலக்கிய ஆளுமையின் வாழ்க்கைத் துணைவி என்ற நிலையைக் கடந்து கமலா … மேலும்
சுந்தர ராமசாமியுடன் வாழ்ந்த ஐம்பதாண்டுக் காலத்தின் அனுபவங்களை இந்த நூலில் முன்வைக்கிறார் கமலா ராமசாமி. ஓர் இலக்கிய ஆளுமையின் வாழ்க்கைத் துணைவி என்ற நிலையைக் கடந்து கமலா ராமசாமி துல்லியமான அவதானிப்பாளராகவும் இந்தக் குறிப்புகளில் தெரியவருகிறார். பிறந்த ஊரான கடம்போடுவாழ்வில் கழித்த இளம் பருவத்தை நினைவு கூரும்போது அந்த ஊரும் அந்நாளைய மனிதர்களும் அந்தக் காலகட்டமும் மீண்டு வருகிறது. சுந்தர ராமசாமியின் மனைவியான பின்னர் நாகர்கோவில் வாழ்வில் பெற்ற அனுபவங்களையும் நேர்த்தியுடன் மீட்டெடுக்கிறார். சு.ராவின் இலக்கியச் செயல்பாடுகளும் தனி வாழ்க்கை அக்கறைகளும் கமலாவின் வருகையால் செழுமைபெற்றதை மிகையற்ற விவரங்களாக நாம் வாசிக்கிறோம். கடம்போடுவாழ்வைச் சேர்ந்த ஒரு வெகுளிப் பெண் நம் காலத்தின் பெரும் இலக்கிய ஆளுமையின் சக உயிராக மாறும் அமைதியான விந்தையை இயல்பாகக் காண்கிறோம். தமிழ் இலக்கியச் சூழலில், செல்லம்மா பாரதியின் நூலுக்குப் பிறகு இலக்கியவாதியான கணவரைப்பற்றி மனைவி எழுதிய நூல் இந்த நூலாகவே இருக்கலாம்.
ISBN : 9788190464727
SIZE : 13.9 X 0.9 X 20.9 cm
WEIGHT : 197.0 grams
Kamala Ramaswamy writes about her famous writer-husband Sundara Ramaswamy.
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
நாடோடிக் கட்டில்
-மஹ்மூத் தர்வீஷ் அரபு மொழியில் எழுதிய கவிதைகளை ஜாகிர் ஹுசைன் நேரடியாகத் தமிழில்
மொழிபெயர் மேலும்














