Your cart is empty.
நாவலும் வாசிப்பும்
வாசிப்பு என்றதும் ஒருவர் தனியாக அமர்ந்து மௌனமாக வாசிக்கும் காட்சி நம் மனதில் இயல்பாக எழக்கூடும். இத்தகைய வாசிப்புக்கு … மேலும்
வகைமைகள்: விற்பனையில் சிறந்தவை | விருதுபெற்ற எழுத்தாளர் | கட்டுரைகள் | ஆய்வு நூல் |
வாசிப்பு என்றதும் ஒருவர் தனியாக அமர்ந்து மௌனமாக வாசிக்கும் காட்சி நம் மனதில் இயல்பாக எழக்கூடும். இத்தகைய வாசிப்புக்கு வயது சற்றேறக்குறைய நூறு ஆண்டுகள் என்று சொன்னால் நம்புவதற்குக் கடினமாக இருக்கலாம். வாசிப்பு என்பது பொது இடங்களில் சமூக நிகழ்வாக இருந்த நிலை அடியோடு மாறிவிட்டது. இந்த மாற்றத்தின் பின்னணியில் நவீன தமிழின் வளர்ச்சிப் போக்கு இருக்கிறது. நாவல் என்னும் கலைவடிவம் தமிழுக்கு வந்த விதமும் வளர்ந்த விதமும் இருக்கின்றன.
நாவலை ஒரு கலை வடிவமாக அல்லாமல் பண்பாட்டு வரலாற்றின் முக்கியக் கூறாகக் கண்டு அதன் பன்முகப் பரிமாணங்களை ஆழ்ந்து அலசும் நூல் இது. ஆ. இரா. வேங்கடாசலபதி வரலாற்றுக்குரிய துல்லியமும் புனைவுக்குரிய சுவையும் கொண்ட மொழியில் இதை எழுதியிருக்கிறார்.
நாவல் என்பது பன்முக வாசிப்புக்கு உரியது. நாவல் வாசிப்பும் வரலாறு, சமூகம், பண்பாடு எனப் பன்முக அடையாளம் கொண்டது. அந்த அடையாளங்களைச் சித்திரமாகத் தீட்டுகிறது சலபதியின் எழுத்து.
ISBN : 9788187477273
SIZE : 14.1 X 0.6 X 21.5 cm
WEIGHT : 166.0 grams
The book discusses the craft of Novel as a form and how the novel entered Tamil society and established itself. And how the existing reading habits were disrupted by the printing machine. The book elaborates how silent reading evolved in tamil culture.














