Your cart is empty.
பள்ளம்
சு.ரா.வின் ஆறு சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். 1985ஆம் ஆண்டில் வெளிவந்த தொகுப்பின் மறு பிரசுரம். ‘ஆத்மாராம் சோயித்ராம்’, ‘ரத்னாபாயின் ஆங்கிலம்’ போன்ற சு.ரா.வின் மிகச்சிறந்த கதைகளாகப் பேசப்பட்ட … மேலும்
வகைமைகள்: விற்பனையில் சிறந்தவை | விருதுபெற்ற எழுத்தாளர் | சிறுகதைகள் |
சு.ரா.வின் ஆறு சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். 1985ஆம் ஆண்டில் வெளிவந்த தொகுப்பின் மறு பிரசுரம். ‘ஆத்மாராம் சோயித்ராம்’, ‘ரத்னாபாயின் ஆங்கிலம்’ போன்ற சு.ரா.வின் மிகச்சிறந்த கதைகளாகப் பேசப்பட்ட கதைகளை உள்ளடக்கிய தொகுப்பு.
சுந்தர ராமசாமி
சுந்தர ராமசாமி (1931 - 2005) தமிழின் முன்னோடி எழுத்தாளர்களில் ஒருவரான சுந்தர ராமசாமி நாகர்கோவிலில் பிறந்தார். பள்ளியில் மலையாளமும் ஆங்கிலமும் சமஸ்கிருதமும் கற்றார். 1951இல் ‘தோட்டி யின் மக’னைத் தமிழில் மொழிபெயர்த்ததே முதல் இலக்கியப் பணி. 1951இல் புதுமைப்பித்தன் நினைவு மலரை வெளியிட்டார். இவரது முதல் கதையான ‘முதலும் முடிவும்’ அதில் இடம் பெற்றது. மூன்று நாவல்களும் பல கட்டுரைகளும் சுமார் 60 சிறுகதைகளும், பசுவய்யா என்ற பெயரில் கவிதைகளும் எழுதினார். 1988இல் காலச்சுவடு இதழை நிறுவினார். சுந்தர ராமசாமிக்கு டொரொன்டோ (கனடா) பல்கலைக்கழகம் வாழ்நாள் இலக்கியச் சாதனைக்கான ‘இயல்’ விருதை (2001) வழங்கியது. வாழ்நாள் இலக்கியப் பணிக்காகக் ‘கதா சூடாமணி’ விருதையும் (2003) பெற்றார். சுந்தர ராமசாமி 14.10.2005 அன்று அமெரிக்காவில் காலமானார்.
ISBN : 9789381969434
SIZE : 13.8 X 0.3 X 21.4 cm
WEIGHT : 88.0 grams
A collection of six short stories of Surra. Some of them were much acclaimed when first published in 1985.














