Your cart is empty.
பட்டு
“திரும்பி வா. இல்லையென்றால் இறந்துவிடுவேன்” * முன்னாள் ராணுவத்தினனான ஹெர்வே ஜான்கர் புதிய தொழிலான பட்டு வியாபாரத்துக்காக பிரான்சிலிருந்து உலகின் கடைசியான ஜப்பானுக்குப் போகிறான். தரமான பட்டுப் … மேலும்
மொழிபெயர்ப்பாளர்: சுகுமாரன் |
வகைமைகள்: உலக கிளாசிக் நாவல் | நவீன உலக கிளாசிக் நாவல் |
“திரும்பி வா. இல்லையென்றால் இறந்துவிடுவேன்” * முன்னாள் ராணுவத்தினனான ஹெர்வே ஜான்கர் புதிய தொழிலான பட்டு வியாபாரத்துக்காக பிரான்சிலிருந்து உலகின் கடைசியான ஜப்பானுக்குப் போகிறான். தரமான பட்டுப் புழுக்களைக் கொள்முதல் செய்வது அவன் நோக்கம். அங்கே புதிரான சூழலில் ஒரு பெண்ணைச் சந்திக்கிறான். தொடாமலும் பேசாமலும் அவர்களுக்குள் வளரும் உறவு நாடு திரும்பியும் அவனை வசீகரிக்கிறது. மீண்டும் மீண்டும் கடல் கடந்து செல்கிறான். அவள் ரகசியமாகக் கொடுக்கும் கடிதம் அவனை அலைக்கழிக்கிறது. அது அவனால் வாசிக்க முடியாத மொழியில் எழுதப்பட்டது. வாசிக்க வைத்துத் தெரிந்துகொண்ட பின்பு அதில் மறைந்திருக்கும் மர்மம் அவனை வசியப்படுத்துகிறது. திகைப்படையச் செய்கிறது. * பத்தொன்பதாம் நூற்றாண்டுப் பின்புலத்தில் எழுதப்பட்ட இந்த நாவல் ஓர் உருவகக் கதையாகவும் வரலாற்றுப் புனைவாகவும் காதல் கதையாகவும் காமத்தின் தேடலாகவும் பவுத்த தரிசனமாகவும் வெவ்வேறு வடிவம் கொள்கிறது. * இருபதுக்கும் அதிகமான உலக மொழிகளில் பெயர்க்கப்பட்ட அலெசான்ட்ரோ பாரிக்கோவின் இத்தாலிய மொழி நாவல் பிரெஞ்சு - கனடிய இயக்குநர் ஃப்ரான்ஸ்வா கியார்த் இயக்கத்தில் திரைப்படமாகவும் வெளிவந்திருக்கிறது.
அலெசான்ட்ரோ பாரிக்கோ
அலெசான்ட்ரோ பாரிக்கோ ‘பட்டு’ (செட்டா – Seta) என்ற இந்நாவல் இத்தாலிய மொழியில் 1996இல் வெளியானது. அடுத்த ஆண்டே ஆங்கில மொழிபெயர்ப்பும் வெளியிடப்பட்டது. தொடர்ந்து முப்பது பிற மொழிகளில் பெயர்க்கப்பட்டது. 2005இல் மேடை நாடகமாகவும் 2007இல் திரைப்படமாகவும் தயாரிக்கப்பட்டது. நாடக வடிவை அமெரிக்க நாடக இயக்குநர் மேரி ஸிம்மர்மான் உருவாக்கினார். பிரெஞ்சு – கனடிய இயக்குநர் பிரான்ஸ்வா கியார்த் திரைப்படத்தை இயக்கினார். * இந்த நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பாளர் கியூதோ வால்ட்மான், இத்தாலி மொழியிலிருந்து செவ்விலக்கியங்களை ஆங்கிலத்துக்கு மொழியாக்கம் செய்திருப்பவர். பொக்காசியோவின் ‘டெக்கமரான் கதைகள்’ குறிப்பிடத்தகுந்த ஒன்று. பென்குவின் இத்தாலியச் சிறுகதைகள் தொகுப்பின் மொழியாக்கமும் பதிப்பும் வால்ட்மானுடையவை.
ISBN : 9789381969649
SIZE : 15.3 X 0.7 X 22.7 cm
WEIGHT : 186.0 grams
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
மந்திரவாதியின் சீடன்
அய்ரோப்பியக் கலாச்சார வார்ப்புக்குப் பலியாகி, அகச் சிடுக்குகள் நிறைந்தவராய் அல்லாடும் ஒருவர் தனது மேலும்
பிராப்ளம்ஸ்கி விடுதி
பெல்ஜிய நாட்டின் ஆரென்டக் நகரில் அமைந்துள்ள புகலிடம் தேடுவோர் மையத்தில் தங்கியிருக்கும் புலம்பெயர மேலும்