Your cart is empty.
பெருந்தொற்று
-அல்பெர் கமுய் படைத்துள்ள இப்புதினம், அண்மையில் உலகை உலுக்கிய
கொரோனாப் பெருந்தொற்று நோயின் கடந்த கால வடிவமான பிளேக் நோயைப்
பற்றிய புனைவாகக் கொள்ளலாம். கமுய் பிறந்த … மேலும்
மொழிபெயர்ப்பாளர்: சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகர் |
வகைமைகள்: கிளாசிக் நாவல் |
-அல்பெர் கமுய் படைத்துள்ள இப்புதினம், அண்மையில் உலகை உலுக்கிய
கொரோனாப் பெருந்தொற்று நோயின் கடந்த கால வடிவமான பிளேக் நோயைப்
பற்றிய புனைவாகக் கொள்ளலாம். கமுய் பிறந்த அல்ஜீரியாவில் ஓரான் என்னும்
ஊரில் இப்புதினத்தில் விவரிக்கப்படும் பிளேக் நோய் தொடர்பான சம்பவங்கள்
நடைபெறுகின்றன. 1940 களில் தாக்கியதாகச் சொல்லப்படும் அந்நோய் எத்தகைய
விளைவுகளைச் சமூகத்தில் ஏற்படுத்தின என்பதை அழகியலோடு காட்சிப்படுத்தி
இருக்கிறார் கமுய்.
வெறுக்கத்தக்க அம்சங்கள் தான் மனிதர்களிடம் அதிகமாக மண்டிக் கிடப்பதாக
நம்மில் பலருக்கும் ஆதங்கம் இருக்கும்.ஆனால்,ஆராதிக்கக்கூடிய எத்தனையோ
பண்புகள் மக்களிடம் உள்ளன என்பதை இப்புதினம் விளக்குகிறது. பெருந்தொற்று
என்பது ஓர் உருவகம்,ஒரு வடிவம்,ஒரு குறியீடு.போர்,அடக்குமுறை போன்ற
எதுவெல்லாம் மனிதன் இறக்க காரணமாகிறதோ அவையெல்லாம்
பெருந்தொற்று தான். வாழ்க்கை என்பது அபத்தம் என்று கூறி விரக்தி
அடையாமல் சவால்களை எதிர்த்துப் போராட வேண்டும். அதன்மூலம்
வாழ்க்கைக்கு ஓர் அர்த்தத்தைத் தேடலாம் என்பதே கமுய் தரும் செய்தி.
ISBN : 978-81-19034-16-1
SIZE : 13.9 X 1.7 X 21.9 cm
WEIGHT : 0.4 grams
சரோஜினி கனகசபை(முக நூல் பதிவு)
16 Oct 2023
"போரால் உயிரிழந்தவர்களைவிட நோயால் உயிரிழந்தவர்கள்தான் அதிகம்" என்பார்கள்
வரலாற்று ஆய்வாளர்கள். இது சாதாரண பழமொழி என்று கடந்து போய்விட முடியாது. வரலாற்று
நெடுகிலும் நடந்த கோர சம்பவங்களை உற்று நோக்கினால் இதில் உள்ள நிதர்சனத்தைத் தெரிந்து
கொள்ளலாம். நம் கண்ணில்படாத கொடூர கிருமிகளான பிளேக், காலரா, ஃப்ளு, கொரோனா
போன்ற கொடூர நோய்களால் இனம், மொழி, மதம், நிறம், நாடு, கண்டம் என எந்தப் பேதங்களுமின்றி
உயிரிழந்தார் ஏராளம்.
கதை சொல்லியான மருத்துவர் பெர்நார் ரியே, மின்தூக்கியிலிருந்து வெளியேறி வரும் போது ஒரு
செத்த எலியைக் கடந்து வருகிறார் என்பதிலிருந்து கதை தொடங்குகிறது. அல்ஜீரியக்
கடற்கரையில் அமைந்திருக்கும் ஓரான் என்றழைக்கப்பட்ட ஒரு நகரின் மக்கள் தொகையில் பாதிப்
பேரைக் கொன்றழித்த பிளேக் என்னும் நுண்கிருமியைப் பற்றி எழுதப்பட்ட இந்நூல் 1947இல்
வெளியாகியுள்ளது.
எலிகளிடமிருந்து மனிதர்களுக்குக் கட்டுப்படுத்த முடியாத வகையில் பெருந்தொற்று பரவி,
தொடர்ந்து ஒருவர் பின் மற்றொருவராக ஓரான் நகரம் எங்கும் தொற்றுநோய் பரவி, ஒவ்வொரு
தெருவிலும் பீதியை உருவாக்குகின்றது.
டாக்டர் ரியே அவரைச் சுற்றியுள்ளவர்களின் நோய் தாக்கத்தின் விளைவுகளை புரிய
வைப்பதற்காகவும், நோயிலிருந்து மக்களை பாதுகாப்பதற்காகவும் ஓய்வின்றி உழைக்கிறார்.
நோயின் வீரியத்தை ஓரான் நகரத்து மக்கள் முழுமையாகப் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள்.
அவர்களில் கால்வாசிப் பேர் இறந்துகொண்டிருந்தபோதும்கூட மிச்சமிருந்தவர்கள் அவ்வாறு
தங்களுக்கு நிகழாது என்பதற்கான காரணங்களைக் கற்பனை செய்து கொண்டிருந்தார்கள் ‘...அது
மேற்கிலிருந்து முற்றிலும் அழிக்கப்பட்டு விட்டது என்று எல்லோருக்கும் தெரியும்’ என்று ஒரு
கதாபாத்திரம் இந்நூலில் கூறுகிறது.
நோய்த்தொற்று உச்சத்துக்குச் சென்று , வாரம் ஒன்றுக்கு 500 பேர் இறந்துகொண்டிருந்தபோது
மனிதர்களின் சீரழிவு காரணமாகக் கடவுள் அளித்த தண்டனைதான் பிளேக் என்று விளக்கி பனுல்
என்றழைக்கப்படும் கத்தோலிக்கப் பாதிரியார் ஒருவர் உரையாற்றிக்கொண்டிருந்தார்.
ஒரு குழந்தை இறப்பதைப் பார்த்த டாக்டர் ரியே ஒன்றைத் தெளிவாகவே புரிந்துகொண்டார்:
துயரங்கள் இலக்குகள் இல்லாமலே பகிரப்படுகின்றன, அதற்கு எந்த அர்த்தமும் இல்லை, அது ஒரு
அபத்தம் மட்டுமே. இந்த அபத்தத்தை ஏற்றுக்கொள்வது நம்மை விரக்தியை நோக்கி
இட்டுச்செல்லாது, அதற்கு மாறாக இன்பம், துன்பம் இரண்டிலிருந்தும் மீள உதவும் என்கிறார்.
ஓராண்டுக்குப் பிறகு, முழுமையாகவே பிளேக் நீங்கிவிட்டது. நகர மக்கள் கொண்டாடினர்.
துயரங்கள் முடிவுக்கு வந்தன. இயல்பு நிலை திரும்பியது. எனினும், ‘இந்த நிகழ்வுகள் இறுதி
வெற்றியைப் பெற்ற கதையாக இருக்காது’ என்று டாக்டர்க்குத் தெரியும் என்றே ஆசிரியர் கீழ்
கண்ட வரிகளில் விளக்குகிறார்.
"பெருந்தொற்றின் நுண்ணுயிர் இறப்பதில்லை அல்லது முற்றிலும் மறைந்து விடாது. மேஜை,
நாற்காலிகள், உடைகள் என அந்த நுண்ணுயிர் நம் படுக்கையறைகள், நிலவறைகள், பெட்டிகள் ,
கை குட்டைகள், பழைய காகிதங்கள் போன்ற இடங்களில் பத்து ஆண்டுகளுக்கு மேலாகவும் அது
பொறுமையாகக் காத்திருக்கும்."
எப்போது வேண்டுமானாலும் மீண்டும் வரலாம். எதிர் கொள்ள தயாராய் நாம் இருக்க வேண்டும்
என வலியுறுத்துகிறார்.
பெருந்தொற்று என்பது ஓர் உருவகம், ஒரு வடிவம், ஒரு குறியீடு. போர், அடக்குமுறை போன்ற
எவையெல்லாம் மனிதன் இறக்கக் காரணமாகின்றனவோ அவையெல்லாம் பெருந்தொற்றுதான்.
வாழ்க்கை என்பது அபத்தம் என்று கூறி விரக்தி அடையாமல் சவால்களை எதிர்த்துப் போராட
வேண்டும். அதன் மூலம் வாழ்க்கைக்கு ஓர் அர்த்தத்தைத் தேடலாம் என்பதே இந்நாவலில் கமுய்
தரும் செய்தி.
வெறுக்கத்தக்க அம்சங்கள்தான் மனிதர்களிடம் அதிகமாக மண்டிக் கிடப்பதாக நம்மில் பலருக்கும்
ஆதங்கம் இருக்கும். ஆனால், ஆராதிக்கக்கூடிய எத்தனையோ பண்புகள் மக்களிடம் உள்ளன
என்பதை இப்புதினம் விளக்குகிறது
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
பெருந்தொற்று
-அல்பெர் கமுய் படைத்துள்ள இப்புதினம், அண்மையில் உலகை உலுக்கிய
கொரோனாப் பெருந்தொற்று நோயின மேலும்
மானசரோவர்
பகுத்தறிவின் எல்லையை உணர்வதிலும் உணர்த்துவதிலும் முக்கியப் பங்கு வகிப்பது ‘மானசரோவர்’ நாவலின் மு மேலும்