Your cart is empty.


பிள்ளைக் கடத்தல்காரன்
மேலும்
இந்தத் தொகுப்பிலுள்ள பெரும்பாலான கதைகள் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டவை என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார். எல்லா அனுபவங்களும் எல்லாச் சம்பவங்களும் கதைகளாகிவிடுவதில்லை. அவற்றுக்குள் ஒளிந்திருக்கும் கதைகளைக் கண்டுபிடித்துப் படைப்பாக்குவது ஒரு கலை. அந்தக் கலையில் அபாரமான தேர்ச்சி பெற்றவர் அ. முத்துலிங்கம். அதற்கு இந்தத் தொகுப்பிலுள்ள கதைகளே சாட்சி.
எளிமையான சொற்கள், சரளமான நடை, சிக்கனமான விவரணைகள், துல்லியமான சித்தரிப்புகள், அடியோட்டமாகத் தொடர்ந்துவரும் நுட்பமான அங்கதம் ஆகியவை முத்துலிங்கத்தின் சிறப்பம்சங்கள். இவை எல்லாவற்றையும் தாண்டி, அவரிடத்தில் வெளிப்படும் கலை நுட்பம் செழுமையான வாசக அனுபவத்தைத் தந்துவிடுகிறது; பன்முக வாசிப்புக்கும் இடம் தருகிறது.
ISBN : 9789384641238
SIZE : 14.0 X 1.0 X 21.1 cm
WEIGHT : 232.0 grams