அடிக்கடி சந்தித்திராத மனிதர்களை மாஜிதாவின் கதைகளில் சந்திக்கலாம். பல கதைகள் இங்கிலாந்தில் நிகழ்கின்றன; அவற்றில் வரும் கதாபாத்திரங்கள் நாம் அவ்வளவாகக் கேள்விப்படாதவர்கள். நவீன உலக ஒழுங்கின் நடைமுறைகளால் …
மேலும்
அடிக்கடி சந்தித்திராத மனிதர்களை மாஜிதாவின் கதைகளில் சந்திக்கலாம். பல கதைகள் இங்கிலாந்தில் நிகழ்கின்றன; அவற்றில் வரும் கதாபாத்திரங்கள் நாம் அவ்வளவாகக் கேள்விப்படாதவர்கள். நவீன உலக ஒழுங்கின் நடைமுறைகளால் நசுக்கப்படும் அவர்களின் சிக்கல்களை ஆச்சரியப்படும் வகையில் கதைகளாக்கியுள்ளார். புலம்பெயர்ந்த சூழல் அளிக்கும் விந்தையான வாழ்வனுபவங்களை மாஜிதா துல்லியமாக அவதானிக்கிறார். இக்கதைகளில் தென்படும் பெரியவர்களின் உலகமும் குழந்தைகளின் உலகமும் ஒன்றோடு ஒன்று உரசி நம்மைத் திகைக்க வைக்கின்றன. லாகவமாகச் சொல்லும் மொழியின் தனித்தன்மையால் இக்கதைகள் மேலும் பலமடைகின்றன.