Your cart is empty.
பிரமிள்
எம். யுவன்: படிமங்களின் தொகுப்பாக பிரமிள் உருவாக்கிய பல கவிதைகள் இருக்கின்றன. ஒரே படிமத்தை விளக்கமாக எழுதிய கவிதைகளும் இருக்கின்றன. நாம் ஏற்கனவே பேசிய கவிதை ‘காவியம்’. … மேலும்
எம். யுவன்: படிமங்களின் தொகுப்பாக பிரமிள் உருவாக்கிய பல கவிதைகள் இருக்கின்றன. ஒரே படிமத்தை விளக்கமாக எழுதிய கவிதைகளும் இருக்கின்றன. நாம் ஏற்கனவே பேசிய கவிதை ‘காவியம்’. அதில் நான்கு வரிகளில் முழுமையான ஒரு படிமம் இருக்கிறது. அவ்வரிகளில் எளிமை இருக்கிறது. அழகு இருக்கிறது. சாந்தம் இருக்கிறது. இம்மாதிரியான கவிதைகளை எழுதிய பின்னர் எப்படி சிடுக்கான கவிதைகளுக்குப் போக முடிந்தது என்ற ஆச்சரியம் எனக்கு இருக்கிறது. சுகுமாரன்: பிரமிளின் தனி ஆளுமை அல்லது கவி ஆளுமை என்பதே சிடுக்கானது. அது இலகுவாக இருக்கும் கணத்தில்தான் ‘காவியம்’ போன்ற கவிதைகள் உருவாகின்றன. இன்னொரு கவிதை ‘எல்லை’. அதில் நேரடியான இரண்டு படிமங்கள் இருக்கின்றன. எரிந்து கருகும் விறகு, அதிர்கிற தந்தி ஆகிய இரண்டு படிமங்களின் இயக்கமாகவே கவிதை முன்னேறுகிறது. கவிதையில் பெரிய சிக்கல்கள் எதுவும் இல்லை. சிடுக்குகளும் கிடையாது. அப்படியானதொரு மனோநிலை தொடர்ந்து பிரமிளுக்கு இருக்கவில்லை என்று நினைக்கிறேன். (பிரமிள் குறித்த உரையாடலிலிருந்து)
ISBN : 9789352440498
SIZE : 13.9 X 0.8 X 21.5 cm
WEIGHT : 163.0 grams
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
மறியா தாமுவுக்கு எழுதிய கடிதம்
-கடந்த சில ஆண்டுகளில் சு.ரா. எழுதிய 12 கதைகளின் தொகுப்பு இந்நூல்.
சு.ரா.வின் புனைவுலகம் அ மேலும்