Your cart is empty.
பிரசாதம்
சுந்தர ராமசாமியின் சிறுகதைத் தொகுப்புகளை மீண்டும் மறுபதிப்பாகக் கொண்டுவரும் திட்டத்தில் வெளிவரும் இரண்டாவது தொகுப்பு இது. இதில் ‘பிரசாதம்’, ‘சன்னல்’, ‘லவ்வு’, ‘ஸ்டாம்பு ஆல்பம்’, ‘ஒன்றும் புரியவில்லை’, … மேலும்
வகைமைகள்: விற்பனையில் சிறந்தவை | விருதுபெற்ற எழுத்தாளர் | சிறுகதைகள் |
சுந்தர ராமசாமியின் சிறுகதைத் தொகுப்புகளை மீண்டும் மறுபதிப்பாகக் கொண்டுவரும் திட்டத்தில் வெளிவரும் இரண்டாவது தொகுப்பு இது. இதில் ‘பிரசாதம்’, ‘சன்னல்’, ‘லவ்வு’, ‘ஸ்டாம்பு ஆல்பம்’, ‘ஒன்றும் புரியவில்லை’, ‘வாழ்வும் வசந்தமும்’, ‘கிடாரி’, ‘சீதை மார்க் சீயக் காய்த்தூள்’, ‘மெய் + பொய் = மெய்’ ஆகிய ஒன்பது கதைகள் உள்ளன. “சுந்தர ராமசாமியின் சிறுகதைகளிலே உருவ அமைதியுடன் கருத்தமைதியும் கலந்து வந்துவிடுகிறது என்பது அவருடைய தனிச் சிறப்பாகும். ஜானகிராமனின் கிண்டல், கசப்புடன், சுந்தர ராமசாமி தனது என ஒரு ஆழத்தையும் கனத்தையும் சேர்த்துக் கொண்டுவிடுகிறார்” என்கிறார் இத்தொகுப்பு குறித்த மதிப்புரையில் க.நா. சுப்ரமண்யம்.
சுந்தர ராமசாமி
சுந்தர ராமசாமி (1931 - 2005) தமிழின் முன்னோடி எழுத்தாளர்களில் ஒருவரான சுந்தர ராமசாமி நாகர்கோவிலில் பிறந்தார். பள்ளியில் மலையாளமும் ஆங்கிலமும் சமஸ்கிருதமும் கற்றார். 1951இல் ‘தோட்டி யின் மக’னைத் தமிழில் மொழிபெயர்த்ததே முதல் இலக்கியப் பணி. 1951இல் புதுமைப்பித்தன் நினைவு மலரை வெளியிட்டார். இவரது முதல் கதையான ‘முதலும் முடிவும்’ அதில் இடம் பெற்றது. மூன்று நாவல்களும் பல கட்டுரைகளும் சுமார் 60 சிறுகதைகளும், பசுவய்யா என்ற பெயரில் கவிதைகளும் எழுதினார். 1988இல் காலச்சுவடு இதழை நிறுவினார். சுந்தர ராமசாமிக்கு டொரொன்டோ (கனடா) பல்கலைக்கழகம் வாழ்நாள் இலக்கியச் சாதனைக்கான ‘இயல்’ விருதை (2001) வழங்கியது. வாழ்நாள் இலக்கியப் பணிக்காகக் ‘கதா சூடாமணி’ விருதையும் (2003) பெற்றார். சுந்தர ராமசாமி 14.10.2005 அன்று அமெரிக்காவில் காலமானார்.
ISBN : 9788189945312
SIZE : 13.8 X 0.6 X 21.4 cm
WEIGHT : 152.0 grams