Your cart is empty.
சிவப்பு ரிக்ஷா
ஒரு சொல் குறைபடாமலும் ஒரு சொல்லை மிகையாகக் கொள்ளாமலும் தேர்ச்சியுடன் கச்சிதமாக உருவாக்கப்பட்டவை தி.ஜா.வின் கதைகள். தனது அனுபவ உலகத்தை முன்வைக்க எந்தெந்த வடிவங்கள் துணையாக அமையுமோ … மேலும்
வகைமைகள்: விற்பனையில் சிறந்தவை | விருதுபெற்ற எழுத்தாளர் | சிறுகதைகள் |
ஒரு சொல் குறைபடாமலும் ஒரு சொல்லை மிகையாகக் கொள்ளாமலும் தேர்ச்சியுடன் கச்சிதமாக உருவாக்கப்பட்டவை தி.ஜா.வின் கதைகள். தனது அனுபவ உலகத்தை முன்வைக்க எந்தெந்த வடிவங்கள் துணையாக அமையுமோ என்று அந்தரங்கமாகப் பரிசீலித்தே தனது கதைகளை உருவாக்கியிருக்கிறார். அவற்றை வெகுஅநாயாசமாகவே மேற்கொண்டிருக்கிறார் என்பதன் சான்று அந்தக் கதைகளில் மிளிரும் மேதைமை. தன்னைச் சுற்றிலுமுள்ள உலகம் சிறிதும் பெரிதுமாக, சாதாரண அசைவுகளில்கூட வியப்புகள் நிறைந்து இயங்குவதை ரசனையுடன் வெளிப்படுத்துபவை தி.ஜா.வின் கதைகள். அந்த இயக்கத்தின் ஆதாரப் புள்ளியான மனித இயல்பைக் கரிசனத்துடன் வெளிப்படுத்துகிறார். எளிய மனிதர்களின் அசாதாரணத் தருணங்களாக அவை உருமாற்றம் கொள்கின்றன. தமிழில் இதுவரை வெளிவந்துள்ள கலைத்தன்மை மிகுந்த கதைகளின் வரிசையில் சந்தேகமின்றி இடம் பெறும் கதைகள் இவை.
தி. ஜானகிராமன்
தி. ஜானகிராமன் (1921-1982) தி. ஜானகிராமன் தஞ்சை மாவட்டம் மன்னார்குடியை அடுத்த தேவங்குடியில் பிறந்தவர். பத்து வருடங்கள் பள்ளியாசிரியராகப் பணியாற்றியவர். பின்பு அகில இந்திய வானொலியில் பணியாற்றி ஓய்வுபெற்றார். கர்நாடக இசை அறிவும் வடமொழிப் புலமையும் பெற்றிருந்தவர். 1943இல் எழுதத் தொடங்கிய தி. ஜானகிராமன், ‘மோக முள்’, ‘அம்மா வந்தாள்’, ‘மரப்பசு’ உள்ளிட்ட ஒன்பது நாவல்கள், நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், மூன்று நாடகங்கள், பயண நூல்கள் ஆகியவற்றை எழுதினார். சிட்டியுடன் இணைந்து எழுதிய ‘நடந்தாய் வாழி காவேரி’ பயண இலக்கிய வகையில் முக்கியமான நூலாகக் கருதப்படுகிறது. ‘மோக முள்’, ‘நாலு வேலி நிலம்’ ஆகியன திரைப்படமாக்கப்பட்டுள்ளன. ‘மோக முள்’, ‘மரப்பசு’, ‘அம்மா வந்தாள்’ ஆகிய நாவல்களும் பல சிறுகதைகளும் இந்திய, ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. 1979இல் ‘சக்தி வைத்தியம்’ சிறுகதைத் தொகுப்பிற்கு சாகித்திய அக்காதெமி விருது வழங்கப்பட்டது.
ISBN : 9789352440108
SIZE : 13.8 X 9.0 X 21.5 cm
WEIGHT : 202.0 grams