Your cart is empty.
வண்ணநிலவன் சிறுகதைகள் 1970-2019
வண்ணநிலவனின் கதாபாத்திரங்கள் வாழ்க்கைச் சோதனையில் அனைத்தையும் பறிகொடுத்த பின்னரும் அன்பின் நெகிழ்ச்சியைத் தக்கவைத்துக்கொண்டிருப்பவர்கள். … மேலும்
வண்ணநிலவனின் கதாபாத்திரங்கள் வாழ்க்கைச் சோதனையில் அனைத்தையும் பறிகொடுத்த பின்னரும் அன்பின் நெகிழ்ச்சியைத் தக்கவைத்துக்கொண்டிருப்பவர்கள். மனிதனை மனிதனாகக் காண்பதற்கு இவருக்குக் கடைசியாக மிஞ்சியிருக்கும் அடையாளம் இதுதான். கதை மரபிலிருந்து விடுபட்டுச் சிறுகதைக்குரிய சிக்கனம், குறிப்புணர்த்தல், குறைவாகக் கூறி அனுபவ அதிர்வுகளுக்கு இடம் தரும் பாங்கு ஆகிய சிறுகதைக்குரிய சிறப்பம்சங்களை இவரது கதைகளில் காணலாம். சுந்தர ராமசாமி
ISBN : 9789355232977
SIZE : 140.0 X 37.0 X 217.0 cm
WEIGHT : 705.0 grams
காயத்ரி குரு books_and_lits (இன்ஸ்டகிராம் பதிவு)
3 Sep 2025
வண்ணநிலவன் சிறுகதைகள்
நூலைப் பற்றிய பார்வை:
“அநேகமாக எல்லாக் கதைகளிலும் வறுமை பிரதானமாக உள்ளது. வாழ்வின் பல விதமான பிரச்சினைகளில் தனக்கே உரிய சிலவற்றின் பிடியிலிருக்கும் ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒவ்வொரு வகையான சோகத்தையும் கஷ்டத்தையும் கடத்துகின்றன. அவ்வுளவு வேதனை தரும் சூழல்களிலும் ஒரு வித நெகிழ்ச்சி, ஒரு வித அன்பு, ஒரு வித மனிதாபிமானம் பெரும்பாலான கதைகளில் பாய்கிறது.”














