Your cart is empty.
யார் அறிவாரோ
கொங்கணி மொழியிலிருந்து நேரடியாகத் தமிழுக்கு நூல்வடிவில் வெளிவரும் முதல் படைப்பு ‘யார் அறிவாரோ.’ காட்டில் தனிமையில் வாழும் வனப் பாதுகாவலாளி ஒருவன் தன்னை எரிக்கும் காமத்தை எதிர்கொள்ளும் … மேலும்
மொழிபெயர்ப்பாளர்: இரா. தமிழ்ச்செல்வன் |
வகைமைகள்: இந்திய கிளாசிக் நாவல் |
கொங்கணி மொழியிலிருந்து நேரடியாகத் தமிழுக்கு நூல்வடிவில் வெளிவரும் முதல் படைப்பு ‘யார் அறிவாரோ.’ காட்டில் தனிமையில் வாழும் வனப் பாதுகாவலாளி ஒருவன் தன்னை எரிக்கும் காமத்தை எதிர்கொள்ளும் விதமும் அதனையொட்டிய மனப் போராட்டங்களுமே கதையின் மையம். வாசிப்போரின் அகத்தே விளம்பும் எண்ணற்ற செய்திகள் கதையிலுண்டு. தனிமையின் சலிப்பான பொழுதுகள், ஒழுங்கின்மையுடன் ஒவ்வாது நிற்கும் காமம், நோய்க்கூறு நிரம்பிய சமூகப் போக்கு இவையனைத்தும் கதையில் கவனிக்கத்தக்கன. நிஜத்தில் கடந்துவந்த மனிதர்களைக் கதையிலும் கடக்க நேரிடுகிற அனுபவம் வாசிப்போருக்கு வாய்க்கும்.
மஹாபளேஷ்வர் ஸைல்
மஹாபளேஷ்வர் ஸைல் (பி. 1943) கொங்கணி எழுத்தாளரான மஹாபளேஷ்வர் ஸைல் கர்நாடக மாநிலம் கார்வாரில் பிறந்தவர். இந்திய இராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற பிறகு எழுதத் தொடங்கினார். இதுவரை நான்கு சிறுகதைத் தொகுப்புகள், ஐந்து புதினங்கள் வெளியாகியுள்ளன. மராத்தி மொழியிலும் எழுதிவருகிறார். இவர் மராத்தியில் எழுதிய ‘தாண்டவ்’ (2012) என்ற புதினம் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஸைல் எழுதிய நான்கு நாடகங்கள் மேடையேற்றப்பெற்றுள்ளன. ‘தரங்கா’ என்ற சிறுகதைத் தொகுப்பிற்காக 1993ஆம் ஆண்டு சாகித்திய அக்காதெமி விருது வழங்கப்பட்டது. இவரது இலக்கியப் பணிகளை அங்கீகரிக்கும் விதமாக இந்தியாவின் உயரிய இலக்கிய விருதுகளில் ஒன்றான சரஸ்வதி சம்மான் விருது (2016) வழங்கப்பட்டது. மஹாபளேஷ்வர் ஸைல் தற்போது கோவாவில் வசித்துவருகிறார்.
ISBN : 9789386820051
SIZE : 14.0 X 0.6 X 21.5 cm
WEIGHT : 148.0 grams
Adrusht by eminent writer Mahabaleshwar Sail is the first novel to be translated directly from Konkani in Tamil. Translated by R. Tamilselvan the novel is of a forest guard struggling with his burning lust. A reader can find reflections of their own emotions, and glimpses of the reality they might have faced in this brilliant novel. The boredom of loneliness, unrelenting lust, sickness of society are well portrayed in the novel. A Konkani film was made on Adrusht and it received the Critic’s Award at the Toronto International Film Festival<\p>
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
கவி வந்த்யகட்டி காயியின் வாழ்வும் சாவும்
சைதன்யரின் வருகையோடு சமூகச் சலனங்கள் உருவான பதினைந்தாம் நூற்றாண்டின் வங்காளத்தில் பழங்குடிச்சமூக மேலும்













