Your cart is empty.
ஏறுவெயில்
நகரமயமாதலின் விளைவாகத் தன்னுடைய பூர்விக நிலத்தை விட்டுச் செல்லும் ஒரு கிராமத்துக் குடும்பத்தின் கதைதான் ‘ஏறுவெயில்'. இந்த இடப்பெயர்வினூடே நடக்கும் பொருளாதார, சமூக, உறவுச் சிக்கல்களை இந்த நாவல் தீவிரமாகக் கையாள்கிறது.
வெயில் தகிக்கும் பிரதேசத்தில் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்துவரும் ஒரு படைப்பாளி வெயில் தரும் உணர்வுடன் வாழ்க்கையை அணுகிப் பார்த்ததன் வெளிப்பாடு இந்த நாவல். இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து இயங்குவதற்கான உந்துதலாக அமைந்த நாவல் இது என்று பெருமாள்முருகன் குறிப்பிடுகிறார்.
இது இவருடைய முதல் நாவல். 1991இல் எழுதிய இந்த நாவல் வாசகர்களிடத்தின் தன் புதுமையையும் உயிர்ப்பையும் இன்றளவிலும் தக்கவைத்துக்கொண்டிருக்கிறது.
ISBN : 9788189945411
SIZE : 13.8 X 1.0 X 21.5 cm
WEIGHT : 247.0 grams
வினோபா ஸ்டெர்லின்
16 Feb 2026
பெருமாள்முருகனின் ‘ஏறுவெயில்’
வாசகர் பார்வை
”நகரமயமாக்கத்தின் பின் விளைவுகளைப் பேசும் நாவல்”
நன்றி: வினோபா ஸ்டெர்லின் (இன்ஸ்டாக்ராமிலிருந்து)
முழுப்பதிவையும் பார்க்க:
https://www.instagram.com/p/DU4RK-pjP2t/?utm_source=ig_web_copy_link&igsh=NTc4MTIwNjQ2YQ%3D%3D
வினோபா ஸ்டெர்லின் (இன்ஸ்டாக்ராமிலிருந்து)
None
பெருமாள்முருகன் அவர்களின் முதல் நாவல் (1991). கிராமத்து வாழ்க்கையில் பரம்பரையாக சந்தோசமாக வாழ்ந்த ஒரு குடும்பம் காலனி உருவாக்கத்திற்காக சொந்த காடு மற்றும் விவசாய நிலங்களை இழந்து இடம்பெயரும் சூழ்நிலை. புதிய மாற்றத்தின் விளைவாக குடும்பத்தில் ஏற்படும் சிக்கல்கள்,சண்டைகள், உறவுகளுக்கிடையே பிரிவினை, சமூக மாற்றங்கள் மற்றும் சில மனிதர்கள் எவ்வளவு கொடூரமாக நடந்திருக்கிறார்கள் என நாயகன் பொன்னையன் பார்வையில் கதை நகர்கிறது. ஏறுவெயில் நகரமயமானதின் பின் விளைவுகளை எடுத்துரைக்கிறது.
இந்நாவல் வாசகர்களையும் அவரவர் சொந்த ஊருக்கு ஒரு நொடி பயணிக்க செய்யும். ஒரு வேளை கிராமத்து வாழ்க்கையை ருசித்தவர்களானால் இந்த கதையின் உணர்வுகளை இன்னும் ஆழமாக புரிந்து கொள்ள முடியும். தற்போதைய சூழ்நிலையில் கூட இதே நிலமை தான்! சிக்கல்கள் தான் !! பொருளாதார நெருக்கடியால் குடும்பத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடத்தில் !!!
கிராமத்து வாழ்க்கையை இழந்ததில் இருந்து அம்மா-அப்பா சண்டைகள், அண்ணன் நடவடிக்கை, தவறான நண்பர் சேர்க்கை, ராமாயி அக்காவின் மீதான குற்றஉணர்ச்சி மற்றும் அத்தனை இறுக்கத்தில் இருந்தும் விடுபட நினைத்த பொன்னையா, புதிதாக கல்லூரி விடுதியில் சேர்கிறான். அங்கு அவன் எதிர்கொள்ளும் சவால்கள் என வெளிபடையாக முன்வைத்திருக்கிறார். அக்காலகட்டத்தில் மக்களின் அரசியல் ஆர்வம், சினிமா மீதான ஈடுபாடு, ஜாதி வேறுபாடு ,கலாச்சாரம் குறித்து வட்டார வழக்கில் விளக்கியிருக்கிறார்.
நெருக்கடியான சூழலில் வாழ முடியாமல் பழைய நினைவுகளில் மூழ்கி கிடக்கும் பொன்னையனின் தாத்தா மற்றும் அப்பா. அதே சமயம் அவன் அக்கா ,அண்ணன்,அம்மாவின் மாற்றங்கள்! இவையெல்லாம் தற்போதைய வாழ்க்கை நடைமுறையிலும் ஒப்பிட்டு பார்க்க முடிகிறது.
If you are interested in reading “சமூக நாவல் “. It’s for you 📚.
A novel on the urbanisation process and its impact on family and relationships.
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
பூக்குழி (இ-புத்தகம்)
‘பூக்குழி’யின் மூன்றாம் பதிப்பு இது. வாழ்வை ஒருகோணத்தில் அணுகுவதை முதன்மையாக்கிப் பிற கோணங்களையும மேலும்














