Your cart is empty.
பாரதியைப் பற்றி நண்பர்கள்
பாரதியார் எப்படி இருப்பார், எப்படிப் பேசுவார், அவருடைய நடை உடை பாவனைகள் எப்படி இருக்கும்? அவரோடு நெருங்கிப் பழகிய சில நண்பர்களின் நினைவுப் பதிவுகள் பாரதியைப் பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்களைத் தருகின்றன. பாரதியைப் பற்றிய சித்திரத்தை மேலும் துலங்கச்செய்கின்றன.
பாரதியின் நண்பர்கள், அவரோடு பழகியவர்கள், அவரது சமகாலத்தவர்கள் ஆகியோர் அவரோடு பழகிய அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார்கள். சாம்பசிவ ஐயர், வ.உ.சி., சு. நெல்லையப்பர் உள்ளிட்ட இருபத்தாறு ஆளுமைகளின் அரிய நினைவுப் பகிர்வுகள் இந்நூலில் உள்ளன.
பாரதி சீட்டுக்கவி எழுதிய நாள்முதல் மரணம்வரையிலான காலப்பதிவுகள் பாரதியியலுக்கு மேலும் ஒரு மணிமகுடம் சூட்டுகின்றன.











