Your cart is empty.
வேலூர்ப் புரட்சி 1806
-
கைலாசநாதக் குருக்கள், இலங்கைப் பல்கலைக்கழகங்களில் சமஸ்கிருதப் பேராசிரியராகப் பணியாற்றியவர். சைவ ஆ மேலும்
இன்றைய தலைமுறை அறிந்திராத அழகியல் படிமங்களோடு நகரும் ‘சித்தன்சரிதம்’ ஆறுதலை முறையின் கதையை மட்டும மேலும்
கப்பலோட்டிச் சிறை சென்ற வ.உ.சி. வறிய நிலையிலிருந்தபோது அவருக்கு இந்தியத் தமிழர்கள் கைகொடுத்தார்கள மேலும்
தனக்கு மிகவும் பரிச்சயமான சூழலில் மேலும் மேலும் ஓட்டைகளையும் பிளவுகளையும் அய்வாஸின் தன்னிலைக் கதை மேலும்
தி. ஜானகிராமன் முதலும் முடிவுமாகப் புனைகதைக் கலைஞர். அரிதாகவே கட்டுரையாளராகச் செயல்பட்டிருக்கிறார மேலும்
முன்னோடிகள், முன் தலைமுறையினர், சமகாலத்தவர் ஆகிய வெவ்வேறு காலத்தைச் சேர்ந்த இலக்கிய ஆளுமைகளைப் பற மேலும்
முனைவர் பக்தவத்சல பாரதி தமிழ்ச் சூழலின் மானிடவியலை முன் எடுத்தவர். மானிடவியலை முறையாகப் படித்தவர் மேலும்
கைலாசநாதக் குருக்கள், இலங்கைப் பல்கலைக்கழகங்களில் சமஸ்கிருதப் பேராசிரியராகப் பணியாற்றியவர். சைவ ஆகமங்களை முறையாகக் கற்றவர். குடமுழுக்கு விழாக்கள் பல நடத்தியவர். இவர் எழுதிய நூற்களில் ‘சைவத் திருக்கோவிற் கிரியை நெறி’ என்ற நூலின் முதல் பதிப்பு 1963இல் வந்தது. இந்நூல் புராண இதிகாசங்கள் கூறும் சைவ ஆகம மரபுகளையும் தென்னிந்தியக் கோவில்களில் நிகழும் பூஜை ஆகமச் சடங்குகளையும் ஆராய்ந்த செய்திகளின் அடிப்படையில் எழுதப்பட்டது. காலச்சுவடு வெளியீடாக வரும் இந்த நான்காவது பதிப்பில் புதிய புகைப்படங்கள் பல சேர்க்கப்பட்டுள்ளன.
இன்றைய தலைமுறை அறிந்திராத அழகியல் படிமங்களோடு நகரும் ‘சித்தன்சரிதம்’ ஆறுதலை முறையின் கதையை மட்டுமல்ல யாழ்ப்பாணத்துத் தமிழ் சமூகத்தின் பண்பாடு, விழுமியம் என்பவற்றிற்கு மேலாகத் துயர் மிகுந்த வாழ்வியலையும் நுணுக்கமாகப் பதிவுசெய்கிறது.
சோழகக் காற்றும் நிலவும் தவிர்க்க முடியாத கதாபாத்திரங்களாக உடன் வருகின்றன. ஒவ்வொரு கதாபாத்திரமும் சிற்ப நேர்த்தியுடன் செதுக்கப்பட்டிருப்பது முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டியதொன்று.
‘சித்தன் சரித’த்தை சினுவா அச்சிபேயின் ‘சிதைவுக’ளோடு ஒப்பிடத் தோன்றுகிறது
கப்பலோட்டிச் சிறை சென்ற வ.உ.சி. வறிய நிலையிலிருந்தபோது அவருக்கு இந்தியத் தமிழர்கள் கைகொடுத்தார்களோ இல்லையோ தென்னாப்பிரிக்கத் தமிழர்கள் பேருதவி புரிந்தனர். காந்தி வழியாகவும் இந்தப் பொருளுதவி 1916இல் வந்துசேர்ந்தது. இதன் தொடர்பில் ஒரு விவாதம் பல காலமாக நிகழ்ந்துவந்திருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால், வ.உ.சி.க்குப் பணம் தராமல் காந்தி ஏமாற்றிவிட்டார் என்பதே அதன் சாரம். இதுவரை வெளிவராத வ.உ.சி. காந்தி கடிதப் போக்குவரத்தின் அடிப்படையில் இந்த விவாதத்திற்கு இந்நூல் முற்றுப்புள்ளி வைக்கிறது. தென்னாப்பிரிக்கத் தமிழரின் பின்புலம், அவர்களுக்கும் வ.உ.சி.க்குமான தொடர்பு ஆகியவற்றையும் இந்நூல் விவரிக்கிறது. வ.உ.சி.யின் மனைவி மீனாட்சி அம்மாளின் தனித்தன்மையான ஆளுமை முதல்முறையாகத் துலக்கம்பெறுகிறது.
உணர்ச்சிக் கொந்தளிப்பும் அறிவுசார் சுவாரசியமும் மிகுந்த இந்நூலை, வ.உ.சி. எழுதிய எட்டும் காந்தி எழுதிய பதினொன்றுமாக மொத்தம் பத்தொன்பது கடிதங்கள் அணிசெய்கின்றன.
தனக்கு மிகவும் பரிச்சயமான சூழலில் மேலும் மேலும் ஓட்டைகளையும் பிளவுகளையும் அய்வாஸின் தன்னிலைக் கதைசொல்லி கண்டுபிடிக்கிறான். அதன் விளைவாக முழுமையான மற்றொரு நகரமே அவனுக்குத் திறந்து கொள்கிறது. நம்முடைய அன்றாட அலுவல்கள் நிறைந்த உலகில், நம் கண்களுக்குப் புலனாகாமலேயே இருக்கும் மற்றொருவெளி. இந்தப் புலனாகா வெளிக்கான வழிகாட்டிதான் மற்றொரு நகரம். நமக்கு மிக மிகப் பரிச்சயமானவற்றை நாம் தெளிவாகவே காண்பதில்லை என்பதை நமக்கு நினைவூட்டும் வினோத நகரம். பயன்பாடுகளும் நோக்கங்களுமாய்ப் பின்னியிருக்கும் வலையில் பொருள்கள் சிக்கிக்கொண்டிருக்கின்றன. இந்த வலையை நாம் விலக்கிவைக்கும் பொழுதுதான் பொருள்களைப் புதியனவாய்ப் பார்க்கும் வாய்ப்பிற்குள் நாம் விழித்தெழுகிறோம்.
நாம் கண்டுகொள்ளாமல் விட்டுவிடும் உலகங்களுக்கெல்லாம் ப்ராக் நகரின் மற்றொரு நகரம் ஒரு குறியீடாகத் திகழ்கிறது.
தி. ஜானகிராமன் முதலும் முடிவுமாகப் புனைகதைக் கலைஞர். அரிதாகவே கட்டுரையாளராகச் செயல்பட்டிருக்கிறார். அவரது புனைவாக்கங்களின் எண்ணிக்கையையும் அளவையும் ஒப்பிட்டால் கட்டுரைகளாக எழுதியவை குறைவு. எனினும் அவை அவரது படைப்பியக்கத்தைப் புரிந்துகொள்ள முக்கியமானவை.
இதுவரை வெளியானவையும் இதழ்களில் வெளிவந்து வாசகர்களுக்கு எட்டாதவையுமான கட்டுரைகளும் தி. ஜானகிராமன் அபூர்வமாக எழுதியிருக்கும் முன்னுரை, மதிப்புரைகளும் முதன்முறையாக நூல் வடிவில் தொகுக்கப்பட்டுள்ளன. எழுத்து, கலை, பயணம், சமூகம், தன்னனுபவம் ஆகிய பகுப்புகளாகத் தொகுக்கப்பட்டிருக்கும் இந்த நூல் ஓர் உண்மையைத் தெளிவாகக் காட்டுகிறது. அது, கலையுண்மையின் வெளிச்சமும் வாழ்வின் ஈரமும் வெளித்தெரியும் அவரது புனைவு எழுத்துகளுக்குச் சற்றும் குறைந்தவையல்ல தி. ஜானகிராமனின் புனைவு அல்லாத எழுத்துகளும்.
முன்னோடிகள், முன் தலைமுறையினர், சமகாலத்தவர் ஆகிய வெவ்வேறு காலத்தைச் சேர்ந்த இலக்கிய ஆளுமைகளைப் பற்றி வண்ணநிலவன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல்.
‘பொதுவாகவே எந்த எழுத்துக் கலைஞனது படைப்புகளிலும் அவனது அகவுலகம் விரிந்து கிடக்கிறது’ என்று வண்ணநிலவன் நம்புகிறார். இலக்கியத்தையும் இலக்கியவாதிகளையும் பிரித்துப் பார்ப்பதில்லை. படைப்பின் நிறைகுறைகளைச் சுட்டிக் காட்டுகிறார். அதே இயல்பில் படைப்பாளிகளைக் குறித்தும் பேசுகிறார். முடிவானவையாக இல்லாமல் அபிப்பிராயங்களாகவே பகிர்ந்துகொள்கிறார். நீண்ட காலப் படைப்பனுபவமும் இலக்கியப் பட்டறிவும் வண்ணநிலவனின் கருத்துகளைப் பொருட்படுத்திச் சிந்திக்க வாசகரைத் தூண்டுகின்றன.
முனைவர் பக்தவத்சல பாரதி தமிழ்ச் சூழலின் மானிடவியலை முன் எடுத்தவர். மானிடவியலை முறையாகப் படித்தவர்கள் சங்கப்பாடல்களை ஆய்வுக்கு எடுத்த பிறகுதான் தமிழரின் இன அறவியலின் ஒருபகுதி, அவர்களின் உணவுப் பண்பாடு என்னும் விஷயம் வெளிப்படுகிறது.
தமிழரின் முக்கிய விழுமியம், பகிர்ந்துண்ணும் பண்பு. பாட்டுத் தொகை நூற்களில் 81 இடங்களில் விருந்து என்ற சொல் வருகிறது. உலகளாவிய ‘உணவு விலக்கு’ தமிழர்களிடமும் உண்டு; சைவ/அசைவ உணவு வகைகளைச் சமைக்க தனித் தனிச் சட்டிகளைப் பயன்படுத்தினர். இப்படியாகப் பல விஷயங்களைக் கவனப்படுத்துகிறார் பக்தவத்சல பாரதி. சங்கப் பண்பாட்டின் வரலாற்றை அறிவதில் இந்நூலின் பங்களிப்பு மிக முக்கியமானதாகும்.