Your cart is empty.
கண்ணன்
பிறப்பு: 1965
கண்ணன் (பி. 1965) கண்ணன் நாகர்கோவிலிலும் பெங்களூரிலும் கல்வி கற்றார். 1994இல் காலச்சுவடு இதழை மீண்டும் தொடங்கி அதன் ஆசிரியர் - பதிப்பாளராகப் பணியாற்றிவருகிறார். 1995இல் காலச்சுவடு பதிப்பகத்தைத் தொடங்கினார். ‘தமிழ் இனி 2000’ மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர். 2002இல் அமெரிக்க உள்துறையின் அழைப்பின் பெயரில் அங்கு நடைபெற்ற International Visitor Program இல் பத்திரிகையாளராகக் கலந்துகொண்டார். பிராங்க்ஃபர்ட் புத்தகச் சந்தை நிறுவனம் நடத்தும் இளம் பதிப்பாளர்களுக்கான Frankfurt Book Fair Fellowship Programmeஇலும் (2007) கலந்துகொண்டுள்ளார். 2017ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா சிட்னிக்கு Visiting International Publisher திட்டத்தில் அழைக்கப்பட்டார். பல்வேறு இலக்கியம் பரப்பும் அமைப்புகளின் அழைப்பின் பேரில் பதிப்பாளராக இஸ்தான்புல் (இருமுறை), ஷார்ஜா, மலேசியா பாரிஸ் புத்தகச் சந்தை (இருமுறை), நோர்வே ஆகிய நாடுகளுக்குச் சென்று இலக்கிய படைப்புகளை மொழிபெயர்க்கும் பணியை முன்னெடுத்துள்ளார். காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் பிரைவேட் லிமிட்டெட்டின் நிர்வாக இயக்குநராகவும் பதிப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். மனைவி: மைதிலி. மகன்கள்: சாரங்கன், முகுந்தன். தொடர்புக்கு: kannan31@gmail.com
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
அகவிழி திறந்து
பத்திரிகை, பதிப்பகம், லௌகீக வாழ்க்கையில் ஏற்பட்ட தன் அனுபவத்தை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ளும் வகை மேலும்
பிறக்கும் ஒரு புது அழகு
-ஊடகங்களின் அரசியல், அவை பின்பற்ற வேண்டிய அறம், கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள், அவை மக்களோட மேலும்
தமிழக அரசியல்
2008ஆம் ஆண்டு காலச்சுவடு 100ஆம் இதழ் வெளிவந்த நிலையில் திமுக அரசாங்கம், அரசு நூலகங்களில் அதைத் தட மேலும்
எது கருத்துச் சுதந்திரம்
இன்று உலகளவில் பொதுத்தளத்தில் விவாதத்திற்குரிய முக்கியமான விஷயமாகக் கருத்துரிமை முன்னிற்கிறது. நூ மேலும்
பிறக்கும் ஒரு புது அழகு
ஊடகங்களின் அரசியல், அவை பின்பற்ற வேண்டிய அறம், கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள், அவை மக்களோடு மேலும்