Your cart is empty.
சு. கி. ஜெயகரன்
பிறப்பு: 1946
சு. கி. ஜெயகரன் (பி. 1946) தாராபுரத்தில் பிறந்த சு. கிறிஸ்டோஃபர் ஜெயகரன், புவியியலில் காரைக்குடி அழகப்பா கல்லூரியில் இளங்கலைப் பட்டமும் சென்னை மாநிலக் கல்லூரியில் முதுகலைப் பட்டமும் இங்கிலாந்து லஃப்பரோ பல்கலைக்கழகத்தில் நிலத்தடி நீர் ஆய்வு தொடர்பான சான்றிதழ் பட்டமும் பெற்றவர். அரசுசாரா நிறுவனம் ஒன்றில் தமிழக நீர்வள ஆய்வுக் குழுவின் தலைவராக எழுபதுகளில் பணியாற்றிவிட்டு தன்சனீய அரசின் நிலத்தடி நீர்வள ஆலோசகப் பணிபுரிந்த பின், காமன்வெல்த் செயலகத்திற்காக மேற்கு ஆப்பிரிக்க நாடான சியராலியோனில் பணியாற்றினார். ஜப்பானிய நிறுவனம் ஒன்றிற்காக பல மேற்கு ஆப்பிரிக்க, தெற்கு ஆப்பிரிக்க நாடுகளில் பணியாற்றிய பின் ஜெர்மானிய நிறுவனம் ஒன்றிற்காக சாம்பியாவில் பணியாற்றி விட்டு 2011இல் ஓய்வு பெற்றபின் பெங்களூரில் வசிக்கிறார். வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திய தொல்லியல், ஆதிமனிதக் குடியேற்றம், தமிழின வரலாறு ஆகிய துறைகளில் ஆர்வம்கொண்ட ஜெயகரனின் ஆய்வுக் கட்டுரைகள் இந்திய மற்றும் வெளிநாட்டு ஆய்விதழ்களில் வெளியாகியுள்ளன. இவர் எழுதிய இதர நூல்கள் ‘மூதாதையரைத் தேடி’ (கிரியா), ‘தளும்பல்’ (உயிர்மை), ‘மணல்மேல் கட்டிய பாலம்’ (காலச்சுவடு) ‘கறுப்பு கிறிஸ்துவும் வெள்ளை சிங்கங்களும்’ (உயிர்மை).
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
மணல்மேல் கட்டிய பாலம்
இந்திய, தமிழகப் பண்பாட்டு அரசியலில் விவாதிக்கப்பட்டு வரும் இராமர் பாலம், சரஸ்வதி ஆறு, துவாரகை, கு மேலும்
மூதாதையரைத் தேடி
பல கோடி ஆண்டுகள் வரலாறுகொண்ட பூமியில் எத்தனையோ விதமான உயிரினங்கள் தோன்றின. அவற்றில் பல அழிவுற மேலும்