Your cart is empty.
என். சிவராமன் (பி. 1952)
பிறப்பு: பி. 1952
என். சிவராமன் (பி. 1952)
மொழிபெயர்ப்பாளர்
மதுரையில் 1952ஆம் ஆண்டு பிறந்த என். சிவராமன், காமராஜர் பல்கலைக்கழகத்தில் விமர்சனம், கோட்பாடு குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். தியாகராஜர் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
1970களில் ஆர். குமாரசாமி நடத்திய வைகை இதழைக் கொண்டுவருவதில் இணைந்து செயல்பட்டார். க்ரியா பதிப்பக வெளியீடுகளில் மொழிபெயர்ப்பு, செம்மையாக்கப் பணிகளில் பங்காற்றியவர்.
இவர் எழுதிய விமர்சன நூல்கள்: ‘சுவர்கள்’ (1977), ‘காடும் மரங்களும்’ (2023).
‘அதீதப் பொருளாதார ஏற்றத்தாழ்வு: சரிசெய்வதற்கான தருணம்’ (2016) என்ற ஆக்ஸ்ஃபாம் அறிக்கையைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.
