Your cart is empty.
வெயிலோடுபோய்
ச. தமிழ்ச்செல்வனின் மனிதர்கள் வாழ்வின் கடைக்கோடியிலிருந்து எழுபவர்கள். வாழ்வின் நெடுஞ்சாலைகளில் அவர்கள் பயணிக்க முடிவதில்லை. சிண்டுசிடுக்கான நகர வாழ்வின் அனுபவங்களும் இல்லை. கிராமியத்தின் வெள்ளந்தி மனங் களைச் சமூக வாழ்வு தன் ஆக்ரோஷத்தால் வெல்லப் பார்க்கிறது; எனினும் அவர்கள் பின்வாங்குவதில்லை; தொடர்ந்து போராடி வெல்கிறார்கள். இந்த வெற்றியை அவர்களுக்குத் தரும் வல்லமை எது? அந்த ஊற்றுக்கண் எங்கிருந்து பொங்குகிறது? மிகமிக அபூர்வமாக வாய்க்கக் கிடைக்கிற தருணங்களில் ஒற்றை இழையிலிருந்து முகிழ்க்கும் இந்த வாசனையின் பெயர் என்னவோ, அதுதான் இப்படைப்புகளின் ஆதாரம். களந்தை பீர்முகம்மது
ச. தமிழ்ச்செல்வன்
ச. தமிழ்ச்செல்வன் (பி. 1954) விருதுநகர் மாவட்டம், மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர். முன்னாள் ராணுவ வீரர். இவரது முதல் கவிதை 1972இல் கோவில்பட்டியில் வெளியான ‘நீலக்குயில்’ என்ற இலக்கிய இதழிலும், முதல் சிறுகதை 1978இல் ‘தாமரை’ இதழிலும் வெளியாகின. கட்டுரை, சிறுகதைத் தளங்களில் இயங்கி வருபவர்; இடதுசாரி அரசியல் செயல்பாட்டாளர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் மாநிலத் தலைவராகவும் உள்ளார். ‘வெயிலோடு போய் . . .’ இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு. சிவகாசியில் வசிக்கிறார்.