Your cart is empty.
எம்.எஸ்.எஸ். பாண்டியன்
1997-&1999 ஆண்டுகளில் எம்.எஸ்.எஸ். பாண்டியனின் மூன்று கட்டுரைகள் காலச்சுவடில் வெளிவந்தன. அத்தோடு அவருடைய முதல் ஆங்கில நூலின் அறிமுகமும் அவரை ஆசிரிய ராகக் கொண்டு வெளிவந்த ‘South Indian Studies’ இதழ் அறிமுகமும் காலச்சுவடில் பிரசுரமாயின. இவற்றின் தொகுப்பு இந்நூல். முன்னுரை கே. சந்துரு. கண்ணனின் நினைவோடைக் கட்டுரை பின்னுரையாக இடம்பெற்றுள்ளது. பாண்டியன் இந்திய அறிவுச் சூழலிலும் உலகச் சூழலிலும் கவனம்பெறத் தொடங்கிய காலகட்டத்திலேயே அவரது எழுத்துகள் மொழிபெயர்க்கப்பட்டுக் காலச்சுவடில் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. பாண்டியனின் அகால மரணத்தையடுத்து அவரது நினைவைப் போற்றும் முகமாக இந்நூல் வெளிவருகிறது. A collection of three article of MSS Pandiyan. In 1997 and 1999, MSS. Pandiyan's three essays were published in translation in Kalachuvadu magazine. One review of the magazine edited by Pandian ‘South Indian Studies’ and an introduction to Pandian’s first book ‘The Political Economic of Agrarion Change in Nanchilnadu’ also appeared in Kalachuvadu. Along with these articles, K.Chandur's Preface and Kannan's article recalling his anociation with MSS Pandian are also part this book. A tribute MSS Pandian, after his untimely death.
எம்.எஸ்.எஸ். பாண்டியன்
எம்.எஸ்.எஸ். பாண்டியன் காலச்சுவடு கட்டுரைகள் நாகர்கோவிலில் பிறந்த எம்.எஸ்.எஸ். பாண்டியன் (1958-2014) உலக அளவில் மதிக்கப்பட்ட சமூக அறிவியல் அறிஞர். சபால்டர்ன் ஸ்டடீஸ் (Subaltern Studies Collective) குழு உறுப்பினர். மார்த்தாண்டத்தில் இளநிலைப் படிப்பை முடித்த பாண்டியன் சென்னைக் கிறிஸ்தவக் கல்லூரியில் முதுகலை (பொருளியல்) பட்டம் பெற்றார். சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் (MIDS) முனைவர் பட்டம் பெற்று, கல்கத்தா சமூக அறிவியல் ஆய்வு மையத்தில் இரண்டாண்டுகள் (1986 - 88) பணியாற்றினார். பின்னர் MIDSஇல் 2001 வரை பணியாற்றினார். 2009 முதல் காலமாகும்வரை ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் வரலாற்றுப் பேராசிரியராக விளங்கினார். லண்டன், விஸ்கான்சின், ஹவாய் முதலான பல்கலைக்கழகங்களில் வருகைப் பேராசிரியராகவும் ஆய்வறிஞராகவும் விளங்கிய பாண்டியன் எழுதிய நூல்கள்: ‘The Political Economy of Agrarian Change: Nanchilnadu 1880 - 1939’ (1990), ‘The Image Trap: M.G. Ramachandran in Film and Politics’ (1992), ‘Brahmin & Non Brahmin: Genealogies of the Tamil Political Present’ (2007). ஆங்கிலப் பத்திரிகைகளில் பாண்டியன் எழுதிய கூர்மையான அரசியல் விமர்சனக் கட்டுரைகள் மிகுந்த கவனத்தைப் பெற்றன.