Your cart is empty.
காந்தியை அறிதல்
சிந்தனை ஆழமும் விரிவும் கொண்ட இந்தக் கட்டுரைகளில் இந்தியாவின் சிறந்த வரலாற்றறிஞர்களில் ஒருவரான தரம்பால் மகாத்மா காந்தியின் மனவெழுச்சிகளையும் சிந்தனைகளையும் குறித்து முக்கியமான சில பார்வைகளை முன்வைக்கிறார். தன் எட்டாம் வயதில் தகப்பனாருடன் சென்று லாகூர் காங்கிரஸ் மாநாட்டில் காந்தியைப் பார்த்த நாட்களிலிருந்து அவரது சொற்களையும் செயல்களையும் தீவிரமாகப் பார்த்துப் புரிந்துகொண்டு விளக்க முயன்றவர் தரம்பால். காந்தியின் தொகுப்பு நூல்களை முழுமையாகப் படித்திருப்பதோடு இதுவரை வெளிவராத காந்தியின் சில கடிதங்களையும் குறிப்புகளையும் படிக்கும் வாய்ப்புப் பெற்றிருந்த தரம்பால், காந்தியின் இதுவரை அறியப்படாத சில சிந்தனை ஓட்டங்களையும் மன உளைச்சல்களையும் நம்முன் வைக்கிறார். தரம்பாலின் பார்வையில் மகாத்மா காந்தி ஒரு யுகபுருஷர். இந்த நூலில் உள்ள கட்டுரைகள் காந்தியைப் புதிய கோணத்தில் பார்த்துப் புரிந்துகொள்ள உதவுகின்றன.