Your cart is empty.
அந்தர மீன்
மனித உறவுகளில் ஏற்படும் சிக்கல்களையும் சொற்களின் பின்னால் எப்போதும் நடமாடிக்கொண்டிருக்கும் பெயரற்ற பிம்பங்க்ள் பரிமாறிக்கொள்ளும் உணர்ச்சிகளையும் உசாவுகின்றன தேவேந்திர பூபதியின் கவிதைகள். - ஆனந்த்
மனித உறவுகளில் ஏற்படும் சிக்கல்களையும் சொற்களின் பின்னால் எப்போதும் நடமாடிக்கொண்டிருக்கும் பெயரற் மேலும்
சேரனின் கவிதைகள் அன்றைய காலத்துச் சமூக அசை வியக்கத்தின் பதிவுகளாக மட்டுமல்லாமல் சமூக விமர்சனமாகவு மேலும்
‘காலத்தின் இடைவெளியைச் சம்பாஷணைகளால் நிரப்பும் முயற்சியே’ மண்குதிரையின் கவிதையாக்கம். எளிய செயல்க மேலும்
லாவண்யா சுந்தரராஜன் கவிதைகளின் ஆதாரமான மனநிலை அன்புக்கான வேட்கை. அன்பைப் போற்றவும் அன்பின் நெருட மேலும்
இளம் கவிஞர் இசையின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு இது. இன்றைய வாழ்க்கையின் லௌகீக நிகழ்வுகளுக்கும் மேலும்
எழிலரசியின் கவிதைகளில் மனத்தின் கனம் அனைத்தும் கவிதைச் சிறகசைப்பில் மென்மையாய்ச் சொல்லப்படுகின்ற மேலும்
தன்னில் ஆழத் தோய்ந்த மனத்தின் வெளிப்பாடுகள் கவிதைகளாகும்போது அந்தக் கவிதைகள் ஒற்றைப் பரிமாண வாழ மேலும்
அனுபவத்தைக் கவிதை படிமமாக்குகிறது. புனைகதை வரலாறாக்குகிறது என்பது ஓர் இலக்கிய அளவீடு. இவ்விரு அளவ மேலும்
துளித் துளிக் காதல்களையும் பெருங்கடல் காமத்தையும் சித்திரிப்பவை இந்நூலின் பெரும்பாலான கவிதைகள். க மேலும்
சமகாலக் கவிதையில் அபத்தங்களின் தரிசனத்தைத் துல்லியமாகச் சித்தரிக்கும் எழுத்துகள் இந்தத் தொகுதியி மேலும்
நவீன தமிழ்க் கவிதையின் முன்னோடிகளில் ஒருவரான ஞானக்கூத்தன் அண்மைக் காலத்தில் எழுதிய 123 கவிதைகளின மேலும்
மனித உறவுகளில் ஏற்படும் சிக்கல்களையும் சொற்களின் பின்னால் எப்போதும் நடமாடிக்கொண்டிருக்கும் பெயரற்ற பிம்பங்க்ள் பரிமாறிக்கொள்ளும் உணர்ச்சிகளையும் உசாவுகின்றன தேவேந்திர பூபதியின் கவிதைகள். - ஆனந்த்
சேரனின் கவிதைகள் அன்றைய காலத்துச் சமூக அசை வியக்கத்தின் பதிவுகளாக மட்டுமல்லாமல் சமூக விமர்சனமாகவும் அமைவது தான் அவற்றின் சிறப்பு. ஈழப் போராட்டத்தின் ஆரம்பகால அனுபவங்களை, தமிழ்ச் சமூகம் எதிர்கொண்ட நெருக்கடி களை, ஒடுக்குமுறைகளை சேரன் கவிதைகளாகத் தந்தபோது அது போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் இலக்கியமாயிற்று. மறுபுறத்தில் அவை சமூக விமர்சன மாகவும் விரிந்தபோது சமூகம் சார்ந்த பல அரசியல், அறவியல், சமூகவியல் விவாதங்களுக்கு அது இட்டுச் செல்கிறது. அந்த வகையில் கவிதையின் இன்னொரு முக்கியமான பரிமாணத்தை அவருடைய கவிதைகள் வெளிப்படுத்துகின்றன.
‘காலத்தின் இடைவெளியைச் சம்பாஷணைகளால் நிரப்பும் முயற்சியே’ மண்குதிரையின் கவிதையாக்கம். எளிய செயல்களையும் அன்றாடத் தகவல்களையும் பிம்பங்களின் ஓசைகளாகப் பதிவுசெய்திருக்கும் இந்தக் கவிதைகள் நவீனப் படைப்பாற்றலின் புதிய சித்திரங்களைத் தீட்டுகின்றன.
லாவண்யா சுந்தரராஜன் கவிதைகளின் ஆதாரமான மனநிலை அன்புக்கான வேட்கை. அன்பைப் போற்றவும் அன்பின் நெருடல்களைப் பேசவும் அன்புக்கும் அன்பின்மைக்கும் இடையிலான முரண்களை ஆராயவும் இந்தக் கவிதைகள் முயற்சி செய்கின்றன.
இளம் கவிஞர் இசையின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு இது. இன்றைய வாழ்க்கையின் லௌகீக நிகழ்வுகளுக்கும் தனது கனவுகளுக்குமிடையேயான முரண்கள், தவிர்க்கவியலாத சில சமரசங்கள், வாழ்க்கையின் இயல்பாகிப்போன குரூரங்களின் முன் ஒரு பார்வையாளனாகவே நிற்கும் இயலாமை என எல்லாமும் நகையுணர்வுடன் கூடிய கிண்டலான பார்வையில் கவிதைகளாக உருமாற்றம் பெற்றுள்ளன. முதல் தொகுப்புக்கும் இந்தத் தொகுப்புக்குமிடையேயான ஆறாண்டுக்கால இடைவெளியில் கவிதையமைப்பில், செய் நேர்த்தியில் கவிதை மொழியில், பார்வையில் இசையிடம் கூடிவந்திருக்கும் கலைத்திறன் வியப்பளிக்கிறது.
எழிலரசியின் கவிதைகளில் மனத்தின் கனம் அனைத்தும் கவிதைச் சிறகசைப்பில் மென்மையாய்ச் சொல்லப்படுகின்றது. தன்னிச்சையாய்ச் சீழ்க்கை அடித்துப்பாடும் ஒரு பறவையின் ஏகாந்தத்தைக் கொண்டுள்ளன அவரது கவிதைகள். மிகையும் இறுக்கமும் அற்ற எளிய படிமங்களால் நீரோடை போன்ற அமைதியான வாக்கியங்களை வடிக்கிறார் எழிலரசி. வழமையான பெண் உலகில் வழியும் சிறிய சந்தோஷங்கள், சிக்கல்கள், நெருடல்கள் இவையே இவரது கவிதை உலகம். இவை விரிந்து பல தளங்களில் தடம்பதிக்கக் கூடிய சாத்தியங்கள் எழிலரசியின் கவிதைகளில் இருக்கின்றன. கனிமொழி
தன்னில் ஆழத் தோய்ந்த மனத்தின் வெளிப்பாடுகள் கவிதைகளாகும்போது அந்தக் கவிதைகள் ஒற்றைப் பரிமாண வாழ்வுக்கு அதன் மற்ற பரிமாணங்களை, மற்ற தளங்களை உணர்த்துகின்றன. ஒரு தளத்தில் அமைந்துவிட்ட வாழ்வுக்கு மற்ற தளங்களின் அழைப்பாக 'அளவில்லாத மலர்' தொகுப்பிலுள்ள கவிதைகள் அமைந்துவிட்டன.
அனுபவத்தைக் கவிதை படிமமாக்குகிறது. புனைகதை வரலாறாக்குகிறது என்பது ஓர் இலக்கிய அளவீடு. இவ்விரு அளவீட்டிலும் கைவரிசை காட்டுபவர் பெருமாள்முருகன். இது அவரது நான்காவது கவிதைத் தொகுப்பு. சின்னக் குத்தல், கூரிய விமர்சனம், குழந்தைமையின் ஏக்கம், குழந்தை உலகம் பற்றிய வியப்பு, இயற்கை இழப்பு, இயற்கை மீதான பரிவு, சிறு பொழுதுகளில் முடிவடையும் காலம், அநாதி காலத்தின் நொடிப் பொழுதுகள், அரசியல் நக்கல், அரசியல் கரிசனம் என்று அனுபவங்களின் வெவ்வேறு நிலைகளை இந்தக் கவிதைகளில் முன்வைக்கிறார். அதுவும் கனவு கனியும் தருணங்களின் படிமங்களா.
துளித் துளிக் காதல்களையும் பெருங்கடல் காமத்தையும் சித்திரிப்பவை இந்நூலின் பெரும்பாலான கவிதைகள். காதலின் சுடரிலும் காமத்தின் நெருப்பிலும் தவித்தும் நிறைவு கண்டும் மனித உடல்கள் - ஆணும் பெண்ணும் - சஞ்சரிக்கின்றன. இந்த சஞ்சாரத்தில் பாலினம் ஒன்றிணைகிறது. இயற்கை மானுடத்துடன் சங்கமிக்கிறது. பொழுதுகள் பெண்ணின் பருவங்களாகின்றன. காதலையும் காமத்தையும் தனது பரிணாமத்தின் சூழலாக மாற்றிக்கொள்கிறது காலம். தன்னையும் தனது காலத்தையும் எழுதுவதன் மூலம், தான் சார்ந்திருக்கும் சமூகத்தையும் உலகையும் இந்தக் கவிதைகளில் வெளிப்படுத்துகிறார் சுகிர்தராணி.
சமகாலக் கவிதையில் அபத்தங்களின் தரிசனத்தைத் துல்லியமாகச் சித்தரிக்கும் எழுத்துகள் இந்தத் தொகுதியில் உள்ளவை. அழகாகவும் எதிர்ப்பாகவும் வியப்பாகவும் சிக்கலாகவும் தனிமையாகவும் நமது காலத்தின் அபத்தம் உருவம் கொள்கிறது. ‘வாசிக்கும்போதோ எழுதும்போதோ அல்லது சிந்திக்கும்போதோ ஒரு கவிஞன் கட்டாயம் மூடநம்பிக்கையில் வாழ்பவராக இருக்க வேண்டும்’ என்று சொல்லிக்கொள்ளும் ராணி திலக் இந்தக் கூற்றின் மூலம் கேள்விக்குட்படுத்துவது வாசகனின் இருப்பை; காலத்தின் நகர்வை.
நவீன தமிழ்க் கவிதையின் முன்னோடிகளில் ஒருவரான ஞானக்கூத்தன் அண்மைக் காலத்தில் எழுதிய 123 கவிதைகளின் தொகுப்பு இந்நூல். வாசகனின் ‘உளம் நிற்கும் நூல்’. நமது இன்றைய வாழ்வின் கோலங்களை எள்ளலுடனும் கனிவுடனும் சமயங்களில் வேடிக்கையாகவும் சித்திரிக்கும் இந்தக் கவிதைகள் பன்முகம் கொண்டவை. பல குரலில் பேசுபவை. சில புதிரானவை. சில மர்மமானவை. சில வெளிப்படையானவை. சில ரகசியமானவை. சில வினோதமானவை. சில அபத்தமானவை. சில இயல்பானவை. சில பிரகாசமானவை. நவீன மனிதனைப் போன்று அதிநவீனமானவை இந்தக் கவிதைகள். விரிவான களங்களிலும் மாறுபட்ட காலங்களிலும் வேறுபட்ட பார்வைகளுடனும் தனித்துவமான கூறல் முறையிலும் துணிச்சலான சோதனை நோக்கிலும் உருவான இந்தக் கவிதைகள் ஒரு முதிர்ந்த கவிஞரின் பக்குவப்பட்ட இளமைக்குச் சான்றாக நிற்கின்றன.