Your cart is empty.
பாம்புக் காட்டில் ஒரு தாழை
-எளிமையும் நுட்பமும் வாய்ந்தவை லதாவின் கவிதைகள். இயல்பான நடைமுறை அனுபவங்கள் அவரது கவித்துவப் பார்வையில் புதிய நிலைகளை அடைகின்றன. ஆழமான பார்வையில் வாழ்வின் ஈரம், உணர்ச்சிகளின் மேலோட்டமான வெளிப்பாடாகப் போய்விடாமல், உள்ளார்ந்த மென்மையின் கசிவாக
வெளிவருகிறது. படிமங்களின் நகர்தல் வாசக மனத்தின் ஆழங்களில் நெருக்கத்துடன் நுழைந்து சோகம் இழைந்த ரகசியங்களைச் சொல்கிறது. கூடவே கொஞ்சம் மெல்லிய கோபத்தையும்.