Your cart is empty.
Wild Girls, Wicked Words
-
அனுபவத்தைக் கவிதை படிமமாக்குகிறது. புனைகதை வரலாறாக்குகிறது என்பது ஓர் இலக்கிய அளவீடு. இவ்விரு அளவ மேலும்
துளித் துளிக் காதல்களையும் பெருங்கடல் காமத்தையும் சித்திரிப்பவை இந்நூலின் பெரும்பாலான கவிதைகள். க மேலும்
சமகாலக் கவிதையில் அபத்தங்களின் தரிசனத்தைத் துல்லியமாகச் சித்தரிக்கும் எழுத்துகள் இந்தத் தொகுதியி மேலும்
நவீன தமிழ்க் கவிதையின் முன்னோடிகளில் ஒருவரான ஞானக்கூத்தன் அண்மைக் காலத்தில் எழுதிய 123 கவிதைகளின மேலும்
கட்டணம் வசூலிக்கிற கைடுகள் காட்டாத இடத்தில்தான், பார்க்கப்பட வேண்டியவைகள் இருக்கின்றன என்பதைப் பு மேலும்
சமகால நவீன கவிதையின் குறிப்பிடுவதற்குரிய சுய முகங்களில் ஒன்று பா. தேவேந்திரபூபதியினுடையது. பத்துப மேலும்
அனாரின் நான்காவது கவிதைத் தொகுப்பு இது. முன்னர் வெளிவந்த மூன்று தொகுப்புகளின் செறிவுடன் புதிய வ மேலும்
உருவங்களுக்கும் உருவின்மைகளுக்குமான இடைவெளியில் நிகழும் இயக்கத்தின் சிறுபொழுதுகளைக் கவிதையில் நி மேலும்
பெண் வாசனை வீசும் பூமியிலிருந்து எழுந்துள்ளன இந்தக் கவிதைகள். காதல்,
காமம், வெஞ்சினம் மூன மேலும்
சமூகத்தின் பல்வேறு தளங்களிலான அனுபவங்களை, இன்றைய வாழ்வு தரும் உள நெருக்கடியை, பொய்மையாய்த் துலங் மேலும்
சுந்தர ராமசாமி (1931 - 2005) தமிழின் முன்னோடி எழுத்தாளர்களில் ஒருவரான சுந்தர ராமசாமி நாகர்கோவிலில மேலும்
அனுபவத்தைக் கவிதை படிமமாக்குகிறது. புனைகதை வரலாறாக்குகிறது என்பது ஓர் இலக்கிய அளவீடு. இவ்விரு அளவீட்டிலும் கைவரிசை காட்டுபவர் பெருமாள்முருகன். இது அவரது நான்காவது கவிதைத் தொகுப்பு. சின்னக் குத்தல், கூரிய விமர்சனம், குழந்தைமையின் ஏக்கம், குழந்தை உலகம் பற்றிய வியப்பு, இயற்கை இழப்பு, இயற்கை மீதான பரிவு, சிறு பொழுதுகளில் முடிவடையும் காலம், அநாதி காலத்தின் நொடிப் பொழுதுகள், அரசியல் நக்கல், அரசியல் கரிசனம் என்று அனுபவங்களின் வெவ்வேறு நிலைகளை இந்தக் கவிதைகளில் முன்வைக்கிறார். அதுவும் கனவு கனியும் தருணங்களின் படிமங்களா.
துளித் துளிக் காதல்களையும் பெருங்கடல் காமத்தையும் சித்திரிப்பவை இந்நூலின் பெரும்பாலான கவிதைகள். காதலின் சுடரிலும் காமத்தின் நெருப்பிலும் தவித்தும் நிறைவு கண்டும் மனித உடல்கள் - ஆணும் பெண்ணும் - சஞ்சரிக்கின்றன. இந்த சஞ்சாரத்தில் பாலினம் ஒன்றிணைகிறது. இயற்கை மானுடத்துடன் சங்கமிக்கிறது. பொழுதுகள் பெண்ணின் பருவங்களாகின்றன. காதலையும் காமத்தையும் தனது பரிணாமத்தின் சூழலாக மாற்றிக்கொள்கிறது காலம். தன்னையும் தனது காலத்தையும் எழுதுவதன் மூலம், தான் சார்ந்திருக்கும் சமூகத்தையும் உலகையும் இந்தக் கவிதைகளில் வெளிப்படுத்துகிறார் சுகிர்தராணி.
சமகாலக் கவிதையில் அபத்தங்களின் தரிசனத்தைத் துல்லியமாகச் சித்தரிக்கும் எழுத்துகள் இந்தத் தொகுதியில் உள்ளவை. அழகாகவும் எதிர்ப்பாகவும் வியப்பாகவும் சிக்கலாகவும் தனிமையாகவும் நமது காலத்தின் அபத்தம் உருவம் கொள்கிறது. ‘வாசிக்கும்போதோ எழுதும்போதோ அல்லது சிந்திக்கும்போதோ ஒரு கவிஞன் கட்டாயம் மூடநம்பிக்கையில் வாழ்பவராக இருக்க வேண்டும்’ என்று சொல்லிக்கொள்ளும் ராணி திலக் இந்தக் கூற்றின் மூலம் கேள்விக்குட்படுத்துவது வாசகனின் இருப்பை; காலத்தின் நகர்வை.
நவீன தமிழ்க் கவிதையின் முன்னோடிகளில் ஒருவரான ஞானக்கூத்தன் அண்மைக் காலத்தில் எழுதிய 123 கவிதைகளின் தொகுப்பு இந்நூல். வாசகனின் ‘உளம் நிற்கும் நூல்’. நமது இன்றைய வாழ்வின் கோலங்களை எள்ளலுடனும் கனிவுடனும் சமயங்களில் வேடிக்கையாகவும் சித்திரிக்கும் இந்தக் கவிதைகள் பன்முகம் கொண்டவை. பல குரலில் பேசுபவை. சில புதிரானவை. சில மர்மமானவை. சில வெளிப்படையானவை. சில ரகசியமானவை. சில வினோதமானவை. சில அபத்தமானவை. சில இயல்பானவை. சில பிரகாசமானவை. நவீன மனிதனைப் போன்று அதிநவீனமானவை இந்தக் கவிதைகள். விரிவான களங்களிலும் மாறுபட்ட காலங்களிலும் வேறுபட்ட பார்வைகளுடனும் தனித்துவமான கூறல் முறையிலும் துணிச்சலான சோதனை நோக்கிலும் உருவான இந்தக் கவிதைகள் ஒரு முதிர்ந்த கவிஞரின் பக்குவப்பட்ட இளமைக்குச் சான்றாக நிற்கின்றன.
கட்டணம் வசூலிக்கிற கைடுகள் காட்டாத இடத்தில்தான், பார்க்கப்பட வேண்டியவைகள் இருக்கின்றன என்பதைப் புரிந்தவர் கவி இசை. யாரும் பார்க்காத, அதிகம் பார்க்காத மலை முகடுகளை, அருவிகளைக் காட்டுகிறார் . . . ஒரு கவிதைத் தொகுப்பு முழுக்க அங்கதத் தொனியிலேயே கட்டமைக்கப் பட்டு கலை வெற்றியும் பெற்றிருக்கிற சாதனை இசையுடையது. ஷேக்ஸ்பியர் மட்டுமல்ல சாப்ளினும் கவியே. எனக்குச் சாப்ளின் அதிகம் பிடிக்கும். யாரைப் போலவும் அவர் எழுதவில்லை. இசை, இசையைப் போல எழுதுகிறார். அதனாலேயே, தனித்துவம் மிக்க முக்கிய கவியாக நிலைபெறுகிறார். பிரபஞ்சன்
சமகால நவீன கவிதையின் குறிப்பிடுவதற்குரிய சுய முகங்களில் ஒன்று பா. தேவேந்திரபூபதியினுடையது. பத்துப்பதினைந்து கவிஞர்கள் சமகால தமிழ்க்கவிதையை உள்ளடக்கத்தின் பழம்பாசியிலிருந்து அகற்றி, அதேசமயம் தொன்மரபின் தொடர்ச்சி கெடாமல் பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கிறார்கள் என்று சொல்லலாம். இது ஒரு கவிதை இயக்கமாகத் தமிழில் நடந்தது. உலகின் எந்தச் சிகரத்திலிருக்கும் கவிஞனோடும் சம அந்தஸ்துக்கும் மேலே உறவுகொள்ளும் தகுதி கொண்டது சமகாலத்தின் இந்த மாற்றம். இதன் சுவடுகளால் நிறைந்தவை தேவேந்திரபூபதியின் கவிதைகள். அன்றாட நிகழ்வுகளில் சகலவிதமான அனுபவங்களையும் ஆன்மீகத் தளத்திற்கு நகர்த்த இக்கவிதைகள் முயற்சி செய்கின்றன. புற தளங்களின், அலங்காரங்களின் பாசாங்குகளைக் கடக்கவும், அன்பின் ஸ்தூல வடிவை முன் நகர்த்தவும் எத்தனிக்கும் இவரது கவிதைகள்; ‘அன்பு வெகு தூரத்திலிருப்பது! வழியெங்கும் தடைகள்’ என்பதைக் கண்டுபிடிக்கவும் செய்கின்றன. புற உலகின் பற்றுதல்களை அன்பின் கரத்தால் புறந்தள்ளுதலின் மொழி உருவமே இந்த ‘நடுக்கடல் மௌனம்.’ லக்ஷ்மி மணிவண்ணன்
அனாரின் நான்காவது கவிதைத் தொகுப்பு இது. முன்னர் வெளிவந்த மூன்று தொகுப்புகளின் செறிவுடன் புதிய வீச்சை உட்கொண்டிருக்கும் கவிதைகள். பெண்ணை இயற்கையின் பகுதியாக மட்டுமல்ல; இயற்கையாகவும் சமூகத்தின் அங்கமாகவல்ல; சமூகமாகவும் ஆணின் சார்பாகவல்ல; ஆணை நிர்ணயிப்பவளாகவும் மாறும் மானுட மனதின் சொற்பெருக்கு இந்தக் கவிதைகளின் ஆதாரம். ‘இறைவனைத் தொடுவதும் மருதாணி இடுவதும் ஒன்று’ என்று நம்பும் இம்மை சார்ந்த மனதின் கவிதைமுகம் நூலில் வெளிப்படுகிறது.
உருவங்களுக்கும் உருவின்மைகளுக்குமான இடைவெளியில் நிகழும் இயக்கத்தின் சிறுபொழுதுகளைக் கவிதையில் நிரந்தரப்படுத்த விரும்புகிறார் எஸ். செந்தில் குமார். ‘கைப்பையைப் பாதுகாப்பது போலப் பத்திரப்படுத்திய முத்தங்கள்’, ‘குழந்தைகளை வாசலில் நின்று அழைக்கும் வார்த்தைகள்’ என்னும் உருவற்ற உருவங்களும் ‘ஸ்தனத்தில் வந்தமரும் குருவியை விரட்டிப் பாலருந்தும் சிசு’, ‘தன்மேல் நடப்பவர்களைத் தனது மற்றொரு முனைக்கு நகர்த்தும் பூமி’ என்ற உருவம் சார்ந்த உருவின்மைகளும் புதிய கவியுலகை உருவாக்குகின்றன. அதில் கருணையும் கழிவிரக்கமும் அனுதாபமும் கலந்த ஈரமும் நிரம்பியிருக்கிறது. இது செந்தில்குமாரின் மூன்றாம் கவிதைத் தொகுப்பு.
பெண் வாசனை வீசும் பூமியிலிருந்து எழுந்துள்ளன இந்தக் கவிதைகள். காதல்,
காமம், வெஞ்சினம் மூன்றும் அந்நிலத்தின் பருவங்கள். இவற்றை
அனுபவிக்கும் மானிட உயிர் ஒன்று பெண் அல்லது ஒடுக்கப்பட்ட ஆண்.
சமயங்களில் ஈழத்தின் தோற்கடிக்கப்பட்ட இனமாகவும் இருக்கிறது.
ஓடுக்குமுறைக்கு எதிரான ஆக்ரோஷம் இயல்பாகக் கிளர்ந்தெழும்
இக்கவிதைகள் இருப்பைப் பற்றிய துக்கத்தையும் கோபத்தையும்
மட்டுமல்லாமல் அவற்றை மாற்றுவதற்கான அறைகூவலையும்
கொண்டுள்ளன. சுகிர்தராணியின் இதுவரையான கவிதைத்
தொகுப்புகளிலிருந்து முன்னோக்கிச் சென்றிருக்கும் கவிதைகளைக் கொண்டது
இந்த நான்காம் தொகுப்பு.
சமூகத்தின் பல்வேறு தளங்களிலான அனுபவங்களை, இன்றைய வாழ்வு தரும் உள நெருக்கடியை, பொய்மையாய்த் துலங்கும் நிஜத்தை, காதலை, மெல்லப் படர்ந்துவரும் வாழ்வின் நகல் -போலியாக மாறிவிட்ட பிளாஸ்டிக் தன்மையைப் பெருந்தேவியின் கவிதைகள் காட்டிக்கொடுக்கின்றன. வாழ்வின் ‘உண்மைகளைச்’ சொல்வதையோ அவற்றைச் சுட்டிக்காட்டி வாசிப்பாளரை ஏற்க வைப்பதையோ இக் கவிதைகள் செய்யவில்லை. உடன்பாட்டுநிலையில் இல்லாமல் கொடுக்கப்பட்ட ‘உண்மைகளாக’ நம்பப்படுவனவற்றை விமர்சனத்திற்கு உட்படுத்துவதாக அமைந்திருக்கின்றன என்பதே இக்கவிதைகளின் முக்கியத்துவம். வாசிப்பாளனின் தன்னடையாளத்தை விமர்சிப்பதாக, அவன் உணர்வுகளை எள்ளலுக்கு உட்படுத்துபவை இவை.
சுந்தர ராமசாமி (1931 - 2005) தமிழின் முன்னோடி எழுத்தாளர்களில் ஒருவரான சுந்தர ராமசாமி நாகர்கோவிலில் பிறந்தார். பள்ளியில் மலையாளமும் ஆங்கிலமும் சமஸ்கிருதமும் கற்றார். 1951இல் ‘தோட்டி யின் மக’னைத் தமிழில் மொழிபெயர்த்ததே முதல் இலக்கியப் பணி. 1951இல் புதுமைப்பித்தன் நினைவு மலரை வெளியிட்டார். இவரது முதல் கதையான ‘முதலும் முடிவும்’ அதில் இடம் பெற்றது. மூன்று நாவல்களும் பல கட்டுரைகளும் சுமார் 60 சிறுகதைகளும், பசுவய்யா என்ற பெயரில் கவிதைகளும் எழுதினார். 1988இல் காலச்சுவடு இதழை நிறுவினார். சுந்தர ராமசாமிக்கு டொரொன்டோ (கனடா) பல்கலைக்கழகம் வாழ்நாள் இலக்கியச் சாதனைக்கான ‘இயல்’ விருதை (2001) வழங்கியது. வாழ்நாள் இலக்கியப் பணிக்காகக் ‘கதா சூடாமணி’ விருதையும் (2003) பெற்றார். சுந்தர ராமசாமி 14.10.2005 அன்று அமெரிக்காவில் காலமானார்.