Your cart is empty.


பாரதி கருவூலம்
அச்சில் வெளிவந்த பாரதியின் இரண்டாம் படைப்பு ‘ஹிந்து’ நாளிதழில் டிசம்பர் 1904இல் பிரசுரமான கடிதமாகும். 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து இன்றுவரை தென்னகத்தின் தலையாய ஆங்கில நாளேடாக விளங்கிவரும் … மேலும்
அச்சில் வெளிவந்த பாரதியின் இரண்டாம் படைப்பு ‘ஹிந்து’ நாளிதழில் டிசம்பர் 1904இல் பிரசுரமான கடிதமாகும். 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து இன்றுவரை தென்னகத்தின் தலையாய ஆங்கில நாளேடாக விளங்கிவரும் ‘ஹிந்து’வில் பாரதி எழுதிய இருபது கடிதங்களும் குறிப்புகளும் அடங்கிய நூல் இது. இவற்றில் செம்பாதிக்கும் மேலானவை முதன் முறையாக நூல்வடிவம் பெறுகின்றன. அரைகுறையான நறுக்குகளாகவும் செப்பமற்ற பாடங்களோடும் நிலவிய பாரதி எழுத்துக்கள் சில இந்நூல்வழி முழுமையும் செப்பமும் துல்லியமான காலக்குறிப்பும் பெறுகின்றன. இவை தவிர, பாரதியோடு செய்யப்பட்ட ஒரே நேர்காணல் எனக் கருதலாகும் ஒரு கட்டுரையும் முதன்முறையாக நூல்வடிவம் பெறுகிறது.
ISBN : 9788189945329
SIZE : 13.8 X 1.0 X 21.2 cm
WEIGHT : 190.0 grams
This is a collection of letters written by Subramania Bharathi to The Hindu. Bilingual edition edited by A.R. Venkatachalapathy.