Your cart is empty.
ஒரு புளியமரத்தின் கதை
1966இல் முதல் பதிப்பு வெளிவந்த காலத்திலிருந்து தீவிர வாசகர்களின் கவனத்தில் இருந்துவரும் ‘ஒரு புளிய மரத்தின் … மேலும்
வகைமைகள்: விற்பனையில் சிறந்தவை | விருதுபெற்ற எழுத்தாளர் | தமிழ் கிளாசிக் நாவல் |
1966இல் முதல் பதிப்பு வெளிவந்த காலத்திலிருந்து தீவிர வாசகர்களின் கவனத்தில் இருந்துவரும் ‘ஒரு புளிய மரத்தின் கதை’ ஒரு நவீன செவ்வியல் புனைவாக நிலைபெற்றுவிட்டது. மலையாளத்திலும் இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந் நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பை பெங்குயின் வெளியிட்டது. 2000த்தில் தமிழிலிருந்து நேரடியாக ஹீப்ருவில் மொழிபெயர்க்கப்பட்ட ‘ஒரு புளியமரத்தின் கதை’ குறுகிய காலத்தில் இரண்டு பதிப்புகள் கண்டதுடன் அம்மொழிக்குச் சென்றுள்ள முதல் இந்திய மொழி நூல் என்ற பெருமையையும் பெறுகிறது. ஒப்பீட்டிலக்கிய விமர்சகர் கே. எம். ஜார்ஜ் இந்நாவலை நோபல் பரிசுபெறத் தகுதியான தமிழ் நாவலாகக் குறிப்பிடுகிறார்.
சுந்தர ராமசாமி
சுந்தர ராமசாமி (1931 - 2005) தமிழின் முன்னோடி எழுத்தாளர்களில் ஒருவரான சுந்தர ராமசாமி நாகர்கோவிலில் பிறந்தார். பள்ளியில் மலையாளமும் ஆங்கிலமும் சமஸ்கிருதமும் கற்றார். 1951இல் ‘தோட்டி யின் மக’னைத் தமிழில் மொழிபெயர்த்ததே முதல் இலக்கியப் பணி. 1951இல் புதுமைப்பித்தன் நினைவு மலரை வெளியிட்டார். இவரது முதல் கதையான ‘முதலும் முடிவும்’ அதில் இடம் பெற்றது. மூன்று நாவல்களும் பல கட்டுரைகளும் சுமார் 60 சிறுகதைகளும், பசுவய்யா என்ற பெயரில் கவிதைகளும் எழுதினார். 1988இல் காலச்சுவடு இதழை நிறுவினார். சுந்தர ராமசாமிக்கு டொரொன்டோ (கனடா) பல்கலைக்கழகம் வாழ்நாள் இலக்கியச் சாதனைக்கான ‘இயல்’ விருதை (2001) வழங்கியது. வாழ்நாள் இலக்கியப் பணிக்காகக் ‘கதா சூடாமணி’ விருதையும் (2003) பெற்றார். சுந்தர ராமசாமி 14.10.2005 அன்று அமெரிக்காவில் காலமானார்.
ISBN : 9788190080101
SIZE : 14.0 X 1.2 X 21.5 cm
WEIGHT : 271.0 grams
ரத்ன வேல்
9 May 2026
சுந்தர ராமசாமியின் ஒரு புளிய மரத்தின் கதை – நாவல்
”ஊர் வளர்ந்தது... அரசியல் வந்தது... அந்தப் புளியமரம் என்னவானது?”
இந்த முழு நாவலுமே ஒரு புளியமரத்தின் கதை. நாகர்கோவில் அருகில் ஒரு கிராமத்தில் ஒரு பெரிய புளியமரம் இருக்கிறது. ஒரு ஆசான் (நாவலில் வரும் ஆசான், வேறு எந்த ஆசானையும் நினைக்காதீர்கள்) சிறு பையன்களுக்குக் கதை சொல்கிறார். அந்தப் புளிய மரத்தை வெட்டுவதிலிருந்து தான்தான் காப்பாற்றியதாகச் சொல்கிறார். இது கதையா, உண்மையா தெரியவில்லை. காலக்கிரமத்தில் அந்தப் பகுதி வளர்கிறது, புளிய மரத்து பஸ் ஸ்டாண்டாகிறது, வியாபாரங்கள் பெருகின்றன; ஊர் விரிகிறது.
முனிசிபாலிடி தேர்தலும் வருகிறது. தேர்தல் எப்படி ஊரைப் பிரிக்கிறது, முனிசிபாலிடியின் தீர்மானமே அந்த மரத்தை வெட்டுவதுதான், நிறைவேறுகிறதா, இல்லையா என்பதைப் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்
அற்புதமான நாவல். நிறைய பாத்திரப் படைப்புகள். சிறப்பாக நாவலை வளர்த்துகிறார். எழுத்து நடை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.
நன்றி: ரத்ன வேல் (முகநூலிலிருந்து)
முழுப்பதிவையும் வாசிக்க:
The protogonist of this modern classic novel is a Tamarind Tree. Critic K.M.George cited this novel while listing Indian language writers deserving the Nobel Prize.<\p>
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
இல்லாத ஒன்று (இ-புத்தகம்)
-இலக்கியத்தில் பரிசோதனைகளும் மாறுபட்ட வகைமைகளை உருவாக்கும் முயற்சிகளும் தொடர்ந்து நடைபெற்றுவருகின மேலும்














