Your cart is empty.
ஆட்டுதி அமுதே
கவிதையின் முதன்மையான இயல்புகளில் ஒன்று அது என்றும் நிகழ்காலத்தை ஒட்டியே இயங்குகிறது என்பது. நவீனத் தமிழ்க் கவிதையில் இவ்வியல்பை வழுவாது கடைபிடிக்கும் கவிஞர்களில் இசையும் ஒருவர். இசை … மேலும்
கவிதையின் முதன்மையான இயல்புகளில் ஒன்று அது என்றும் நிகழ்காலத்தை ஒட்டியே இயங்குகிறது என்பது. நவீனத் தமிழ்க் கவிதையில் இவ்வியல்பை வழுவாது கடைபிடிக்கும் கவிஞர்களில் இசையும் ஒருவர். இசை கவிதைகளின் பொது இலக்கணம் அவை பெரிதும் நிகழ்காலத்தையே சார்ந்திருக்கின்றன என்பதே. நிகழ்கால மனிதர்களின் அவலங்கள், ஆனந்தங்களை நிகழ்கால உணர்வுடன், நிகழ்கால மொழியில், நிகழ் தருணச் சொற்களில் வெளிப்படுத்துகிறார். இசையின் இதுவரையான கவிதைத் தொகுப்புகளில் காணும் இந்தப் பொது இலக்கணத்துக்கு ஐந்தாவது தொகுப்பான ‘ஆட்டுதி அமுதே!’ புதிய சேர்மானத்தை அளிக்கிறது. பழந்தமிழ்ச் செவ்விலக்கியங்களின் நுட்ப உணர்வையும் மொழியையும் சொற்களையும் இத்தொகுதியிலுள்ள கவிதைகள் மீட்டெடுக்கின்றன. பொன்னைப் புடமிடும் இந்தச் செயல்பாட்டில் தொகுதியின் கவிதைகள் மேலதிகப் பொலிவையும் ஆழத்தையும் பெறுகின்றன.
ISBN : 9789352440528
SIZE : 14.0 X 0.4 X 21.4 cm
WEIGHT : 108.0 grams