Your cart is empty.
அம்மா வந்தாள்
‘அம்மா வந்தாளை’ மீறலின் புனிதப் பிரதியாகக் கொண்டாடலாம். சமூகம் நிறுவிக் காபந்து செய்து வரும் ஒழுக்க மரபைக் கேள்விக்குட்படுத்துகிறது நாவலின் கதை மையம். மனித உறவுகள் நியதி … மேலும்
வகைமைகள்: விற்பனையில் சிறந்தவை | விருதுபெற்ற எழுத்தாளர் | கிளாசிக் நாவல் | தமிழ் கிளாசிக் நாவல் |
‘அம்மா வந்தாளை’ மீறலின் புனிதப் பிரதியாகக் கொண்டாடலாம். சமூகம் நிறுவிக் காபந்து செய்து வரும் ஒழுக்க மரபைக் கேள்விக்குட்படுத்துகிறது நாவலின் கதை மையம். மனித உறவுகள் நியதி களுக்குக் கட்டுப்பட்டவை அல்ல. அவை உணர்ச்சிகளுக்கு வசப்படுபவை. இந்த இரண்டு கருத்தோட்டங்களின் ஈவாகவே மனித வாழ்க்கை இருக்கிறது; இருக்கும் என்பதை வலியுறுத்துகிறது கதை. இவ்விரு நிலைகளில் ஊசலாடுபவர் களாகவே முதன்மைப் பாத்திரங்கள் அமைகின்றன. இந்த ஊசலாட்டத்தை கலையாக்குகிறார் தி. ஜானகிராமன். ஆசாரங்களையும் விதிகளையும் மீறி மனிதர்களை நிர்ணயிப்பது அவர்களது உணர்வுகள்தாம் என்பதை இயல்பாகச் சொல்வதுதான் அவருடைய கலைநோக்கு. அந்த நோக்கம் உச்சமாக மிளிரும் படைப்புகளில் முதலிடம் வகிப்பது ‘அம்மா வந்தாள்’.
தி. ஜானகிராமன்
தி. ஜானகிராமன் (1921 - 1982) தி. ஜானகிராமன் தஞ்சை மாவட்டம் மன்னார்குடியை அடுத்த தேவங்குடியில் பிறந்தவர். பத்து வருடங்கள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர். பின்பு அகில இந்திய வானொலியில் பணியாற்றி ஓய்வுபெற்றார். கர்நாடக இசை அறிவும் வடமொழிப் புலமையும் பெற்றிருந்தவர். 1943இல் எழுதத் தொடங்கிய தி. ஜானகிராமன் ‘மோகமுள்’, ‘அம்மா வந்தாள்’, ‘மரப்பசு’ உள்ளிட்ட ஒன்பது நாவல்கள், நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், மூன்று நாடகங்கள், பயண நூல்கள் ஆகியவற்றை எழுதியிருக்கிறார். சிட்டியுடன் இணைந்து இவர் எழுதிய ‘நடந்தாய் வாழி காவேரி’ பயண இலக்கிய வகையில் முக்கியமான நூலாகக் கருதப்படுகிறது. ‘மோகமுள்’, ‘நாலு வேலி நிலம்’ ஆகிய படைப்புகள் திரைப்படமாக்கப்பட்டுள்ளன. ‘மோகமுள்’, ‘மரப்பசு’, ‘அம்மா வந்தாள்’ ஆகிய நாவல்களும் பல சிறுகதைகளும் இந்திய, ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. 1979இல் ‘சக்தி வைத்தியம்’ சிறுகதைத் தொகுப்பிற்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது. பதிப்பாசிரியர்: சுகுமாரன் (பி.1957) கோவையில் பிறந்தவர். அச்சிதழ், தொலைக்காட்சி, நூல் வெளியீட்டுத் துறைகளில் பணியாற்றியவர். கவிஞர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர். இலக்கிய இதழ்களிலும் இணையத்திலும் தொடர்ந்து எழுதிவருகிறார். திருவனந்தபுரத்தில் வசிக்கிறார்.
ISBN : 9789380240886
SIZE : 13.7 X 0.7 X 21.0 cm
WEIGHT : 225.0 grams
புனிதா சிதம்பரம் (விஜயா பதிப்பகம் யூடியூப் தளம்)
7 Jun 2025
கமலக்கண்ணன் கோபிநாதன்
27 Mar 2025
தி. ஜானகிராமனின் “அம்மா வந்தாள்” நாவல் பற்றிய பார்வை
சில கதாபாத்திரங்கள், எளிய நடை, இலகுவான வாசிப்பு, பக்க அளவில் சிறிய நாவல். ஆயினும் ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் தீவிரமான உணர்ச்சிகளையும் ஆதாரமான கேள்விகளையும் எழுப்பத் தவறவில்லை என்பதே இதன் சிறப்பு. இந்நூல் தமிழின் நற்படைப்புகளுள் ஒன்று என்பதில் ஐயமேதும் இல்லை.
முழுப்பதிவையும் வாசிக்க:
https://www.facebook.com/share/p/15uQrwLxRH/?mibextid=wwXIfr
Janakiraman’s cantrovertial novel. Widely Considered a modern Classic. Beautiful edition.<\p>














