Your cart is empty.


அந்தியில் திகழ்வது
தான் எதிர்கொள்கிற கணங்களில் ஒளிந்திருக்கும் வேறொன்றை அத்துணை ஆசையோடு கண்டடையும் இக்கவிதைகள், நழுவும் அழகிற்காகவும் … மேலும்
தான் எதிர்கொள்கிற கணங்களில் ஒளிந்திருக்கும் வேறொன்றை அத்துணை ஆசையோடு கண்டடையும் இக்கவிதைகள், நழுவும் அழகிற்காகவும் தருணத்து உண்மைக்காகவும் விழிப்புடன் தன்னைத் திறந்துவைக்கின்றன. இயற்கையின் முன்னமர்ந்து மானுட மனம் எப்படியெப்படியெல்லாம் பையப் பைய குணமடைகிறது? அப்பாலும் இப்பாலும் ஒன்றையொன்று எந்த அளவுக்குச் சார்ந்துள்ளன? பார்த்தல் எனும் உயிர்ச்செயல்பாடு பிரார்த்தனைக்கும் ஊழ்கத்திற்கும் எப்புள்ளியில் இணை என்றாகிறது? போன்றவற்றை அணுக்கமாக உணர்த்துவதன் மூலம் ஓர் அடர்ந்த சாயங்காலப்பொழுதின் பரவசத்தை, தொலைவை, இன்னொரு உலகத்தன்மையை, விடுதலையை, மோனத்தை என யாவற்றையும்அளிக்கும் கவிதைகள் இவை.
ISBN : 9789355231406
SIZE : 13.8 X 21.3 X 0.4 cm
WEIGHT : 93.0 grams