Your cart is empty.
ஆரஞ்சாயணம்
நீண்ட இடைவெளியைக் கடந்து வெளிவருகிறது ‘ஆரஞ்சாயணம்.’ இந்த இடைவெளியைப் புதிய தொகுப்பின் கவிதைகள் நுட்பமான கால உணர்வுடன் நிரப்புகின்றன. காட்சி சார்ந்த சித்தரிப்புகள், நினைவேக்கப் பதிவுகள், பகடிக் … மேலும்
நீண்ட இடைவெளியைக் கடந்து வெளிவருகிறது ‘ஆரஞ்சாயணம்.’ இந்த இடைவெளியைப் புதிய தொகுப்பின் கவிதைகள் நுட்பமான கால உணர்வுடன் நிரப்புகின்றன. காட்சி சார்ந்த சித்தரிப்புகள், நினைவேக்கப் பதிவுகள், பகடிக் கூற்றுகள், பெண்நிலைக் குமுறல்கள், நேரடியான மொழிதல்கள், மௌன அரற்றல்கள் என்று நிகழ்காலக் கவிதை வரித்திருக்கும் எல்லா வகைமாதிரிகளிலும் கல்யாணராமன் கைவரிசை காட்டியிருக்கிறார். பேச்சுமொழிக்கு இணக்கமான கூறுமுறை கல்யாணராமனுடையது. அநேகமாக எல்லாக் கவிதைகளும் திறந்த குரலில் சொல்லப்பட்டிருப்பவை. தன் அந்தரங்கத்துக்குச் சொல்லும் ரகசியத்தைக்கூடத் தன்னிடமிருந்து விலக்கி முன்னிலையில் நிறுத்தியே சொல்கிறார். வேடிக்கை பார்ப்பவர்கள் காணாமல் போகவும் கேள்வி கேட்பவர்கள் பிழைத்திருக்கவும் செய்பவை இந்தக் கவிதைகள். சுகுமாரன்
ISBN : 9789386820099
SIZE : 13.8 X 1.0 X 21.4 cm
WEIGHT : 256.0 grams
Aranjayanam is the latest collection of poems by Kalyanaraman after a long break. This break has added a nuanced sense of time to the collection. The poet has tried his best on all genres of contemporary poetry from descriptive images, nostalgic records, satirical expressions, bare expressions to silent screams. His is a poetic language that runs close to the spoken language. Almost all the poems are expressed open voice and even the moments closer to an intimate self are expressed as an outsider. A collection where readers can lose themselves or question and find something new.
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
மயானத்தில் நிற்கும் மரம்
-‘கோழையின் பாடல்கள்’ (2016) நூலுக்கு முன் வெளியான ‘நிகழ் உறவு’ (1992), ‘கோமுகி நதிக்கரைக் கூழாங்க மேலும்














