Your cart is empty.
செவ்வாய்க்கு மறுநாள், ஆனால் புதன்கிழமை அல்ல
“கவிதை எப்போதும் நிகழ்காலத்தைச் சார்ந்தது. அப்படியிருக்கும்போதே காலத்தை மீறிய ஒன்று அதில் இல்லையா? கவிதையின் பேசுபொருள் அன்றாட நடவடிக்கையின் சித்தரிப்பா, இல்லை, அதைப் பற்றிய விசாரணையா? கவிதை, … மேலும்
“கவிதை எப்போதும் நிகழ்காலத்தைச் சார்ந்தது. அப்படியிருக்கும்போதே காலத்தை மீறிய ஒன்று அதில் இல்லையா? கவிதையின் பேசுபொருள் அன்றாட நடவடிக்கையின் சித்தரிப்பா, இல்லை, அதைப் பற்றிய விசாரணையா? கவிதை, மொழியின் துணைப்பண்டமா, உற்பத்தியின் மூலமா? கவிதையின் மொழி வெளிப்படையானதா, தொனிவேற்றுமை கொண்டதா? கவிதைக்குள் இயங்கும் பார்வை மோஸ்தருக்குப் பொருத்தமானதாக இருக்க வேண்டுமா? அதைப் புறக்கணிக்கும் ஒன்றா? கவிதை செய்திக்கான வாகனமா, தனி இருப்பா? கவிதை கைப்பழக்கமா, மனக்கனிவா? கவிதை என்னவாக இருக்க வேண்டும், கவிதையைப் போலவா அல்லது கவிதையாகவா? கவிதையெழுத்துத் தொடங்கிய காலம்முதல் உறுத்திவந்த கேள்விகள் இவை. எல்லாக் காலத்திலும் அவற்றுக்கான பதில்களைத் தேடியிருக்கிறேன். எங்கே, எப்படி என்ற பெரும் கேள்விகளுக்கு இங்கே, இந்தக் கவிதைகளில் என்பதே பதில்.வெளிச்சத்தை அதிக வெளிச்சத்தால் முறியடிப்பதுதானே கவிதையின் வேலை.”
ISBN : 9789386820969
SIZE : 13.9 X 0.3 X 21.4 cm
WEIGHT : 93.0 grams