Your cart is empty.
என் கதை
கமலாதாஸின் ‘என் கதை’யைத் தவிர்த்து, ஒரு பெண்ணின் அக வாழ்க்கையை அதன் சோகத் தனிமையுடனும் உண்மை அன்புக்கான அதன் தீராத வேட்கையுடனும் தன்னையே கடக்கும் அதன் விழைவுடனும் … மேலும்
மொழிபெயர்ப்பாளர்: நிர்மால்யா |
வகைமைகள்: விற்பனையில் சிறந்தவை | விருதுபெற்ற எழுத்தாளர் | இந்திய கிளாசிக் வாழ்க்கை வரலாறு |
கமலாதாஸின் ‘என் கதை’யைத் தவிர்த்து, ஒரு பெண்ணின் அக வாழ்க்கையை அதன் சோகத் தனிமையுடனும் உண்மை அன்புக்கான அதன் தீராத வேட்கையுடனும் தன்னையே கடக்கும் அதன் விழைவுடனும் அதன் ஒழுங்கீனத்தின் நிறங்களுடனும் அதன் கொந்தளிக்கும் கவிதையுடனும் இந்த அளவு உண்மையுணர்வுடன் முழுமையாக வெளிப்படுத்திய ஒரு இந்திய சுயசரிதையை என்னால் நினைத்துப் பார்க்கவே முடிவதில்லை. சச்சிதானந்தன் (மலையாளக் கவிஞர்) There is not a singular work among Indian Autobiographies that expresses the inner life of a woman with such bare honesty. Its melancholic solitude, its unquenchable thirst for the real love, its desire to transcend self, its colors of immorality, its maniac poetry, all finds their complete expression in My Story, says Sachithananthan prominent Malayalam poet. My story is the autobiography of kamaladas, bilingual poet and writer. The book is translated into Tamil by Nirmalya, well-known for his earlier translations of acclaimed malayalam books.
கமலாதாஸ்
கமலா தாஸ் (1934 - 2009) மலையாளத்தில் புனைகதை எழுத்தாளர் மாதவிக்குட்டியாகவும் ஆங்கிலத்தில் கவிஞர் கமலா தாஸாகவும் அறியப்பட்டவர். மலையாள மொழியின் முக்கிய பெண்கவிஞரான பாலாமணியம்மா, மாத்ருபூமி நாளிதழின் இயக்குநர் வி.எம். நாயர் ஆகியோரின் மகள். எழுத்தாளர், கவிஞர், பத்தியாளர் என்ற வகையில் உலகப் புகழ்பெற்றவர். நாவல், சிறுகதை, சுயசரிதை, பத்தி ஆகியவற்றின் நூல்வடிவங்களாக இருபதுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் வெளியாகியுள்ளன. கமலா தாஸின் சிறுகதைகளை ஆதாரமாகக்கொண்டு சில திரைப்படங்களும் எடுக்கப்பட்டுள்ளன. ஆசிய கவிதைப் பரிசு, கென்ட் விருது, ஆசான் கவிதை விருது, கேரள சாகித்திய அக்காதெமி, மத்திய சாகித்திய அக்காதெமி விருதுகள், வயலார் விருது, எழுத்தச்சன் விருது ஆகியவற்றைப் பெற்றவர். புகழ்பெற்ற இந்து நிலவுடைமைக் குடும்பமான நாலப்பாட்டு தறவாட்டில் பிறந்த கமலா காலமாவதற்குச் சில ஆண்டுகளுக்கு முன்பு இஸ்லாம் மதத்தை ஏற்றுக்கொண்டார். இறுதி நாட்களில் புனேயில் வசித்தார். முக்கிய நூல்கள்: ‘என்டெ கத’ (என் கதை); ‘நீர்மாதளம் பூத்த காலம்’; ‘ஒற்றயடிப்பாத’ (ஒற்றையடிப் பாதை); ‘மாதவிக்குட்டியுடெ கதகள்’ (மாதவிக்குட்டியின் கதைகள்); ‘கமலா தாஸின்டெ திரஞ்ஞெடுத்த கவிதகள்’ (கமலா தாஸின் தேர்ந்தெடுத்த கவிதைகள்); ‘Summer in Calcutta’; ‘Old playhouse and other poems’; ‘Only the soul knows how to sing.’
ISBN : 9789352440368
SIZE : 13.9 X 0.8 X 21.5 cm
WEIGHT : 198.0 grams
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
மறியா தாமுவுக்கு எழுதிய கடிதம்
-கடந்த சில ஆண்டுகளில் சு.ரா. எழுதிய 12 கதைகளின் தொகுப்பு இந்நூல்.
சு.ரா.வின் புனைவுலகம் அ மேலும்