Your cart is empty.
ஆனந்தின் கவிதைகளில் இதற்கு முன் இல்லாத மரபார்ந்த சொல்லாட்சியும் கரை உடைத்தேகும் சந்தமும் கூடி மயக்குபவை ‘இளவரசி கவிதைகள்’. இவற்றுடன் பயணம் செய்யும் மனம் தன்னுள் இருக்கும் இளவரசியைத் தேடிக் காணும் அல்லது தேடும் வேட்கை மீதூரப் பயணத்தில் களிகொண்டு மேலும் மேலுமெனச் செல்லக்கூடும். புதிர்க்கதைகளை உற்பத்தி செய்து ஈர்த்துச் செல்கின்றன சில. நெகிழ்தலும் உருகுதலுமாகப் பிரும்மாண்ட வெள்ளத்தில் அடித்துச் செல்கின்றன சில. அகத்திற்கும் புறத்திற்கும் ஆழத்திற்கும் மேலிற்கும் என அலைக்கின்றன சில. ‘தானே தானேதானே’ என உற்சாகம் பொங்கக் கெக்கலி கொட்டுகின்றன சில. இவை கிளர்த்தும் அனுபவ வெளிக்குள் வேகமாகவும் போய்வரலாம்; அசை போட்டபடி நிதானமாகவும் உலவலாம். எப்படியாயினும் ஓர் கண்டடைதல் நிச்சயம். பெருமாள்முருகன்
ISBN : 9789352440610
SIZE : 17.3 X 1.0 X 17.0 cm
WEIGHT : 246.0 grams