Your cart is empty.


காகித மலர்கள்
சூழலியல் சார்ந்த அக்கறைகள், தில்லி அரசியலின் குறுக்குவெட்டுப் பார்வை, பெருநகரத்து மனிதர்களின் உள்ளீடற்ற போலியான வாழ்க்கை, புதிய அரசியல் மற்றும் சமூக இயக்கங்களின் மீது நடுத்தர வர்க்கத்து … மேலும்
வகைமைகள்: விற்பனையில் சிறந்தவை | விருதுபெற்ற எழுத்தாளர் | கிளாசிக் நாவல் | தமிழ் கிளாசிக் நாவல் |
சூழலியல் சார்ந்த அக்கறைகள், தில்லி அரசியலின் குறுக்குவெட்டுப் பார்வை, பெருநகரத்து மனிதர்களின் உள்ளீடற்ற போலியான வாழ்க்கை, புதிய அரசியல் மற்றும் சமூக இயக்கங்களின் மீது நடுத்தர வர்க்கத்து மனிதர்கள் கொள்ளும் எதிர்பார்ப்பு, ஏதோ ஒரு வகையில் எளிமையான தின் மீதும் இயல்பானதின் மீதும் ஒவ்வொரு மனிதனுக்குள் இருக்கும் பற்றுறுதியும் அது தரும் எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையுமே ‘காகித மலர்கள்’ நமக்கு அளிக்கும் சித்திரம். இந்தச் சித்திரமே இந்த நாவலை இன்றைய சூழலில் அவசியம் வாசிக்க வேண்டிய படைப்பாக்குகிறது. (முன்னுரையிலிருந்து)
ஆதவன்
கல்லிடைக்குறிச்சியில் பிறந்த ஆதவனின் இயற்பெயர் கே.எஸ். சுந்தரம். இந்திய ரயில்வேயில் சில ஆண்டுகள் பணியாற்றியபின் தில்லியில் உள்ள ‘நேஷனல் புக் டிரஸ்’டின் தமிழ்ப் பிரிவில் துணைப் பதிப்பாசிரியராகப் பணியாற்றினார். பின்னர் பெங்களூருக்கு மாற்றலாகி வந்த ஆதவன் 1987 ஜூலை 19ஆம் தேதி சிருங்கேரி துங்கா நதியின் சுழலில் சிக்கி மரணமடைந்தார். அறுபதுகளில் எழுதத் தொடங்கிய ஆதவன், தமிழ்ச் சிறுகதை உலகில் குறிப்பிடத்தக்க சாதனைகளை நிகழ்த்தியவர். இவர் எழுதிய ‘முதலில் இரவு வரும்’ என்ற சிறுகதைத் தொகுப்புக்கு சாகித்திய அக்காதெமி (1987) விருது வழங்கப்பட்டது. இவரது பலப் படைப்புகள் இந்திய மொழிகளிலும் ஆங்கிலம், பிரெஞ்ச், ருஷ்ய மொழிகளிலும் பெயர்க்கப்பட்டுள்ளன. மனைவி: ஹேமலதா சுந்தரம் மக்கள்: சாருமதி, நீரஜா
ISBN : 9789382033578
SIZE : 13.9 X 1.7 X 21.4 cm
WEIGHT : 443.0 grams