Your cart is empty.


கடலும் வண்ணத்துப்பூச்சிகளும்
நாற்பதாண்டு காலமாகச் சிறுகதைகள் எழுதிக்கொண்டிருக்கும் சுரேஷ்குமார இந்திரஜித்தின் முதல் நாவல் ‘கடலும் வண்ணத்துப்பூச்சிகளும்’. இந்த நாவலில் ஆதித்ய சிதம்பரம் என்ற எழுத்தாளரின் மனம், சிந்தனை, பால்யகால வாழ்க்கை, … மேலும்
நாற்பதாண்டு காலமாகச் சிறுகதைகள் எழுதிக்கொண்டிருக்கும் சுரேஷ்குமார இந்திரஜித்தின் முதல் நாவல் ‘கடலும் வண்ணத்துப்பூச்சிகளும்’. இந்த நாவலில் ஆதித்ய சிதம்பரம் என்ற எழுத்தாளரின் மனம், சிந்தனை, பால்யகால வாழ்க்கை, மண வாழ்க்கை ஆகியன சித்திரிக்கப்பட்டுள்ளன. அந்த எழுத்தாளரின் ஐந்து குறுநாவல்களின் பகுதிகள் இந்த நாவலில் உள்ளன. அக்குறுநாவல்களின் மீதப் பகுதிகளை ஒவ்வொரு வாசகரின் மனமும் அவரவர்க்கு ஏற்றவாறு கற்பனை செய்துகொள்ளும் சுதந்திரத்தை இந்த நாவல் வழங்குகிறது. புனைவும் யதார்த்தமும் நுட்பமும் கலந்த நாவல் இது. இந்த நாவலின் பின்னணியில் வண்ணத்துப்பூச்சிகள் பறக்கின்றன.
சுரேஷ்குமார இந்திரஜித்
ராமேஸ்வரத்தில் பிறந்து, மதுரையில் வளர்ந்து படித்தவர். மதுரை வருவாய்த்துறையில் சிரஸ்தாராகப் பணியாற்றி 2011இல் ஓய்வு பெற்றவர். மனைவி: மல்லிகா, மகள்கள்: அபிநயா, ஸ்ரீஜனனி. தொடர்புக்கு: sureshkumaraindrajith@gmail.com
ISBN : 9788194302742
SIZE : 13.9 X 0.5 X 21.5 cm
WEIGHT : 125.0 grams