Your cart is empty.
கதைப்பாடல்களில் கட்டபொம்மன்
வீரபாண்டியக் கட்டபொம்மனைச் சிலர் பழி தூற்றி, உண்மையை மறைத்துத் தங்களுக்கு ஏற்பத் திரித்து எழுதினர். இந்நிலையில் அத்தகைய கருத்துகளுக்கு ஆணித்தரமாகப் பதிலளிப்போர் இல்லாமல் போயினர். ஏறக்குறைய நாற்பது … மேலும்
வீரபாண்டியக் கட்டபொம்மனைச் சிலர் பழி தூற்றி, உண்மையை மறைத்துத் தங்களுக்கு ஏற்பத் திரித்து எழுதினர். இந்நிலையில் அத்தகைய கருத்துகளுக்கு ஆணித்தரமாகப் பதிலளிப்போர் இல்லாமல் போயினர். ஏறக்குறைய நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு வரலாற்றுச் சான்றுகளைத் தேடித் துருவி உண்மைகளை உலகுக்கு எடுத்துரைக்கிறார் நண்பர் வே. மாணிக்கம்.
தே. லூர்து
வரலாறு எழுதுவதற்குப் பழைய ஆவணங்களைப் படிக்கத் தெரிந்தால் மட்டும் போதாது. மொழியறிவும் நாட்டார் வழக்காற்றியல் போன்ற துறைகளில் பயிற்சியும் இன்றியமையாதவை. இவற்றைப் பெற்றதனாலும், கட்டபொம்மன்மீது மிக்க காதலார்வம் கொண்டதாலுமே வே. மாணிக்கம் அவர்களால் பல்லாண்டுகளாக இதே துறையில் ஈடுபட்டு முக்கியப் பங்களிப்புகளைச் செய்து வர முடிந்துள்ளது. முதல் சுதந்திரப் போராட்டம் என்ற கருத்தாக்கத்திற்குள் சிக்கிக் கொண்ட கட்டபொம்மன் வரலாற்றை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியவர் வே. மாணிக்கம்.
ஆ. இரா. வேங்கடாசலபதி
இது போன்ற தெளிந்த நோக்கும், செவ்விய ஆய்வும் கொண்ட பல நூல்கள், பல துறைகளில் தமிழ்நாட்டுக்குத் தேவை.
சி.சு. மணி
ISBN : 9789382033912
SIZE : 13.9 X 1.0 X 21.2 cm
WEIGHT : 191.0 grams