கலாப்ரியாவின் வாழ்க்கைப் பார்வை நிகழ்கால எதார்த்தம் சார்ந்தது. ‘இன்னும் கேள்விகள் சொல்லித் தந்து நகரும்‘வாழ்வு, அக உலகில் தோற்றுவிக்கும் சிக்கல்களையும் புற உலகில் ஏற்படுத்தும் நிம்மதியின்மையையும் எதிர்கொள்வதாகவே …
மேலும்
கலாப்ரியாவின் வாழ்க்கைப் பார்வை நிகழ்கால எதார்த்தம் சார்ந்தது. ‘இன்னும் கேள்விகள் சொல்லித் தந்து நகரும்‘வாழ்வு, அக உலகில் தோற்றுவிக்கும் சிக்கல்களையும் புற உலகில் ஏற்படுத்தும் நிம்மதியின்மையையும் எதிர்கொள்வதாகவே அவர் கவிதை இயங்குகிறது. எதார்த்த தளத்திலும் நிகழ்கால நீட்சியிலும் அவரது கவிதைகள் அமைவதால் தீவிரம் கூடியவையாகின்றன. எதார்த்தமானவை என்பதாலேயே தீவிரமானவையாகவும் தீவிரமானதாலேயே எதார்த்தமானவையாகவும் உள்ளன. - சுகுமாரன் ( கலாப்ரியாவின் ‘வனம் புகுதல்’ தொகுப்பு முன்னுரையில்) காலச்சுவடு பதிப்பகத்தின் முதல் கவி நூல் வரிசையில் வெளிவரும் நான்காவது நூல் கலாப்ரியாவின் ‘ மற்றாங்கே’