Your cart is empty.
முன் கூறப்பட்ட சாவின் சரித்திரம்
விதிமையப் பார்வை ‘முன்கூறப்பட்ட சாவின் சரித்திரம்’ நாவலின் மையப்பண்பாக இயங்கியிருக்கிறது. விதியில் நம்பிக்கையற்றவர்கள் இந்தக் கதையில் நிகழும் தொடர் தற்செயல்களின் ஒழுங்கை அவதானிக்கலாம். ஆங்கெலா விகாரியோவின் கன்னித்தன்மை … மேலும்
வகைமைகள்: விற்பனையில் சிறந்தவை | விருதுபெற்ற எழுத்தாளர் | உலக கிளாசிக் நாவல் |
விதிமையப் பார்வை ‘முன்கூறப்பட்ட சாவின் சரித்திரம்’ நாவலின் மையப்பண்பாக இயங்கியிருக்கிறது. விதியில் நம்பிக்கையற்றவர்கள் இந்தக் கதையில் நிகழும் தொடர் தற்செயல்களின் ஒழுங்கை அவதானிக்கலாம். ஆங்கெலா விகாரியோவின் கன்னித்தன்மை இழப்பிற்கு உண்மையில் சந்தியாகோ நாஸார்தான் காரணமென்று நாவலில் எங்குமே நிறுவப்படாமல் விட்டிருப்பதன் மூலம் வாழ்வின் அபத்த அவலம் சுட்டப்படுகிறது. சந்தியாகோ நாஸாரின் கொலையைத் தவிர்ப்பதற்கான வாய்ப்புகள் எப்படி தற்செயல் சம்பவங்களின் மூலம் நிறைவேறாமல் போகின்றன என்பதை மார்க்கேஸின் பிரமாதமான விவரிப்பு விளக்குகிறது. பத்திரிகையாளனின் ஆகச்சிறந்த ஆற்றலான செய்தியை வழங்கும் உத்தியில் புனைவாக்கப்பட்டிருக்கிறது இந்நாவல்.
காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ்
காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் ஸ்பானிய மொழி நவீன இலக்கியத்துக்கு வழங்கிய கலைக் கொடை கொலம்பிய எழுத்தாளர் காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ். மொழியிலும் கதை சொல்லும் முறையிலும் பார்வையிலும் புதிய திசைகளைத் திறந்துவிட்ட எழுத்து மார்க்கேஸுடையது. அவரது வருகைக்குப் பின்பு அவரின் எழுத்து வகையால் தூண்டுதல் பெறாத இலக்கியப் போக்கும் பாதிக்கப்படாத எழுத்தாளர்களும் எந்த மொழியிலும் இல்லை. அவரது மாய எதார்த்தத்தால் வசீகரிக்கப்படாத இலக்கிய வாசகரும் எந்த மொழியிலும் எந்தப் பிரதேசத்திலும் இல்லை. அவரைவிட ஆழமான எழுத்தாளர்களும் அவரைவிட சுவாரசியமான கதைசொல்லிகளும் இருக்கலாம். ஆனால் இலக்கியச் செறிவையும் வெகுவான வாசகப் பரப்பையும் ஒரே சமயத்தில் வசப்படுத்திக் கொண்டதில் மார்க்கேஸுக்கு நிகரானவர்கள் இல்லை. ஷேக்ஸ்பியர், தால்ஸ்தோய், செர்வாண்டிஸ், விக்டர் ஹியூகோ ஆகியோரின் வரிசையில் நவீன உலகம் கண்ட பெருங்கலைஞர் காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ்.
ISBN : 9789352440474
SIZE : 15.0 X 0.5 X 22.9 cm
WEIGHT : 153.0 grams
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
மறியா தாமுவுக்கு எழுதிய கடிதம்
-கடந்த சில ஆண்டுகளில் சு.ரா. எழுதிய 12 கதைகளின் தொகுப்பு இந்நூல்.
சு.ரா.வின் புனைவுலகம் அ மேலும்