Your cart is empty.
நாட்டார் தெய்வங்களும் படையல்களும்
-நாட்டார் தெய்வங்களும் படையல்களும்
தமிழ்ச் சமூகத்தின் நாட்டார் தெய்வங்களும் படையல்களும் மிக நீண்ட வரலாற்றால் கட்டமைக்கப்பட்டவை. சமூகப் பண்பாட்டு வரலாறு இவற்றில் பூடகமாகப் பொதிந்துள்ளது. தாந்திரிகம், ஆசீவகம், … மேலும்
-நாட்டார் தெய்வங்களும் படையல்களும்
தமிழ்ச் சமூகத்தின் நாட்டார் தெய்வங்களும் படையல்களும் மிக நீண்ட வரலாற்றால் கட்டமைக்கப்பட்டவை. சமூகப் பண்பாட்டு வரலாறு இவற்றில் பூடகமாகப் பொதிந்துள்ளது. தாந்திரிகம், ஆசீவகம், சமணம், பௌத்தம், வைதீகம், நாட்டார் சைவம், நாட்டார் வைணவம் எனப் பலவகையான மதங்களும் இவற்றில் செல்வாக்கு செலுத்துகின்றன. இந்த நூலின் விசாலமான பெரும் பரப்பில் இவை அனைத்தையும் வாசித்து அனுபவிக்கலாம்.
54 செறிவான கட்டுரைகள் இந்நூலில் உள்ளன. கட்டுரையாளர்கள் தம் வாழ்வு அனுபவத்திலிருந்து கட்டுரைகளைப் படைத்திருக்கிறார்கள். கள ஆய்வு, அகவயப் பார்வை, செறிவான நோக்கு, அடர்த்தியான வரைவியல் எனப் பலவகையான செய்நேர்த்திகளை நூலில் காணலாம். கத்தோலிக்கத்திலும் தர்காகளிலும் நாட்டார் வழிபாடு சார்ந்த நேர்ச்சைகளையும் படைக்கப்படும் உணவையும் இந்நூல் பேசுகிறது.
நாட்டார் தேவகணத்தின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை இந்நூல் புதிய வெளிச்சத்தில் காட்சிப்படுத்துகிறது. படையல்களின் பண்பாட்டு அர்த்தங்களைக் கண்முன் விரியச் செய்கிறது; இதன் வகைமை யில் இது ஒரு முதல் நூலாகும். நமது நாட்டார் மரபின் பண்பாட்டு ஆவணம் நம் வசமாகியிருக்கிறது. அனைவரும் வாசித்துப் பாதுகாக்க வேண்டிய நூலிது.
ISBN : 9789361100147
SIZE : 14.0 X 2.5 X 21.0 cm
WEIGHT : 500.0 grams
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
தமிழர் உணவு (இ-புத்தகம்)
-காலச்சுவடு செப்டம்பர் 2005 இதழ் தமிழர் உணவுச் சிறப்பிதழாக வெளிவந்தது. இன்றுவரை வெளிவந்த காலச்சுவ மேலும்
சங்ககாலத் தமிழர் உணவு (இ-புத்தகம்)
முனைவர் பக்தவத்சல பாரதி தமிழ்ச் சூழலின் மானிடவியலை முன் எடுத்தவர். மானிடவியலை முறையாகப் படித்தவர் மேலும்




